கார்கே – கே.எஸ்.அழகிரி சந்திப்பு… பெங்களூருவில் திடீர் ட்விஸ்ட்… ஒருவேளை அந்த விஷயமா இருக்குமோ?

2024 மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில் கூடிய சீக்கிரமே தமிழ்நாடு

கமிட்டி தலைவர்

மாற்றப்பட்டு விடுவார் என்ற பேச்சு கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர் கடந்த 2019 முதல் தலைவர் பதவியில் நீடித்து வருகிறார். இதற்கு டெல்லி காங்கிரஸ் தலைமை அனைத்து மாநிலங்களிலும் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதே காரணம்.

மத்திய மாநில அரசுகள் சேர்ந்து சூப்பர் திட்டம் – திருநாவுக்கரசர்
காங்கிரஸ் தலைவர்

இதற்கிடையில் அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? என்ற கேள்வி தீயாய் பரவத் தொடங்கியது. அதில் மூன்று பேரின் பெயர்களையும் கொளுத்தி போட்டனர். முதல் நபர், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை. இவர் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. இரண்டாவது ஜோதிமணி. இவர் கரூர் தொகுதி எம்.பியாக இருக்கிறார். கவுன்சிலராக வாழ்க்கையை தொடங்கி மகிளா காங்கிரஸின் தேசிய செயலாளர் அந்தஸ்தை பெற்றவர்.

யார் அந்த நான்கு பேர்

மூன்றாவது சசிகாந்த் செந்தில். 2009ஆம் ஆண்டு கர்நாடகா பிரிவு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். 10 ஆண்டுகள் சேவை செய்த நிலையில் மத்திய பாஜக அரசு மீதான அதிருப்தியால் வெளியேறினார். பின்னர் காங்கிரஸில் சேர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கடந்த மே மாதம் நடந்த கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வார் ரூம் பொறுப்பாளராக இருந்து வெற்றி பெற உதவினார். தற்போது ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏழாம் பொருத்தம்

மேலும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பெயரும் அடிபடுகிறது. இவர்களில் செல்வப்பெருந்தகை உடன் கே.எஸ்.அழகிரிக்கு ஏழாம் பொருத்தம் என்கின்றனர் கதர் கோஷ்டியினர். இவர் கட்சியினருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. சுயமாகவே முடிவுகளை எடுத்து விடுகிறாராம். எனவே இவருக்கு பொறுப்பு கிடைத்து விடக் கூடாது என்பதில் கே.எஸ்.அழகிரி தரப்பு உறுதியாக இருக்கிறதாம்.

உடன் சென்ற எம்.எல்.ஏக்கள்

இந்நிலையில் பெங்களூரு சென்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கே.எஸ்.அழகிரி நேரில் சந்தித்து பேசினார். அப்போது வேளச்சேரி எம்.எல்.ஏ ஜே.எம்.கே ஆசன் மவுலானா, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர், சோழிங்கர் எம்.எல்.ஏ ஏ.எம்.முனிரத்னம், கொளச்சல் எம்.எல்.ஏ ஜெ.ஜி பிரின்ஸ், விருத்தாச்சலம் எம்.எல்.ஏ எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் மாவட்ட தலைவர்கள் சிலரும் இருந்தனர்.

என்ன பேசினார்?

இந்த கூட்டத்தில் தனது பதவியை தக்க வைக்க சில விஷயங்களை கே.எஸ்.அழகிரி பேசியிருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் பெங்களூருவில் சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி குறித்து எதுவும் பேசவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் வகையிலேயே நேரில் சந்தித்ததாக தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.