
சிங்கம் நாளில் இன்ஸ்டாகிராமுக்குள் நுழைந்த காவ்யா மாதவன்
மலையாள நடிகை காவ்யா மாதவன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மலையாள சினிமாவில் தொண்ணூறுகளின் இறுதியில் துவங்கி முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் காசி, என் மன வானில் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் திருமணம் மற்றும் அதன்பின் குறுகிய காலத்தில் நடந்த விவாகரத்து காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கினார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் திலீப்புக்கும் இவருக்கும் மறுமணம் நடைபெற்று தற்போது மகாலட்சுமி என்கிற பெண் குழந்தையும் இவர்களுக்கு இருக்கிறது.
கணவர் திலீப், அவரது முதல் மகள் மீனாட்சி உள்ளிட்ட தங்களது குடும்பத்தை மட்டுமே கவனிப்பதில் நேரத்தை செலவிட்டு வரும் காவ்யா மாதவன் தற்போது சோசியல் மீடியாவில் அடியெடுத்து வைத்துள்ளார். கேரளாவின் மலையாள புத்தாண்டு துவங்கும் சிங்கம் நாளில் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை துவங்கியுள்ள காவ்யா மாதவன் கேரளாவுக்கே உரிய பாரம்பரிய உடை அணிந்த தனது புகைப்படத்தை முதன் முதலாக அதில் பதிவேற்றி உள்ளார்.