பெங்களூரு – ஓசூர் மெட்ரோ ரயில்… வெடித்தது பெரிய சர்ச்சை… உல்ட்டா ஆகிறதா மெகா திட்டம்?

பெங்களூரு என்றதும் ஐடி தலைநகரம் என்ற விஷயம் தான் சட்டென நினைவுக்கு வரும். இங்கு ஏராளமான ஐடி நிறுவனங்கள் வரிசை கட்டி கால் பதித்து, தற்போது புறநகர் பகுதிகளை நோக்கி விரிவடைந்து வருகிறது. அடுத்தகட்டமாக டயர் 2, டயர் 3 நகரங்களை நோக்கி முதலீடுகள் திரும்பியுள்ளன. இந்த சூழலில் பெங்களூருவில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளை தமிழகத்துடன் இணைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகா அரசு ஒப்புதல்குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் நம்ம மெட்ரோவின் ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரையிலான மஞ்சள் லைனை ஓசூர் வரை நீட்டிக்க கர்நாடகா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக டெண்டர் கோரியுள்ளது. இதில் கலந்து கொண்டு டெண்டரை பெறும் நிறுவனம் அறிக்கை தயார் செய்ய ஆய்வில் இறங்கிவிடும்.பெங்களூரு டூ ஓசூர் மெட்ரோபெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் (BMRCL) திட்டப்படி, பொம்மசந்திரா முதல் ஓசூர் வரை 20.5 கிலோமீட்டர் தூரத்திற்கு வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 11.7 கிலோமீட்டர் கர்நாடகா எல்லைக்குள்ளும், எஞ்சிய 8.8 கிலோமீட்டர் தூரம் தமிழக எல்லைக்குள்ளும் இடம்பெறுகின்றன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் பெங்களூரு நகரின் நெருக்கடி குறையும். ஓசூருக்கு இடம்பெயர மக்கள் விரும்புவர்.
​அமைச்சர் பிரியங்க் கார்கே ஷாக்எளிதான போக்குவரத்து மூலம் தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வர் எனக் கூறப்படுகிறது. ஆனால் கர்நாடகா மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ள விஷயம் பெரிய குண்டை தூக்கி போட்டது போல் அமைந்துள்ளது. அதாவது, பெங்களூரு – தமிழகம் மெட்ரோ ரயில் இணைப்பால் பிளான் உல்ட்டாவாக மாறிவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்புபெங்களூரு தொழில்துறையை பாதிக்கும் என்பது போல் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் ஓசூர் நகர் நிலத்தின் மதிப்பு மிகவும் குறைவு. மாநில அரசு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்மூலம் ஓசூர் நகரை நோக்கி முதலீட்டாளர்களின் கவனம் திரும்பிலாம்.
​தொழில் நகரம் ஓசூர்ஏற்கனவே டைட்டன், அசோக் லேலண்ட், டிவிஎஸ் மோட்டர்ஸ் போன்ற பெரு நிறுவனங்களும், 2,000க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் இருக்கின்றன. புதிதாக மெட்ரோ ரயில் வசதியும் வந்துவிட்டால், பெங்களூருவில் குவியும் முதலீடுகள் ஓசூருக்கு போய்விட்டால் என்ன செய்வது என அச்சப்படுகிறார்களாம். இதன்மூலம் பெங்களூருவில் இருந்து பலரும் ஓசூரில் வேலை தேடி தினசரி பயணிக்கும் நிலை வரும். இது தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு தான் உதவும் என்கின்றனர்.
ரூட்டை மாற்றும் கர்நாடகா மக்கள்எனவே ஓசூருக்கு பதிலாக கோலார், ஒஸ்கோடே, தொட்டாபல்லபூர், பிடாடி போன்ற டயர் 2, டயர் 3 நகரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம். அங்கு மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வர முயற்சிக்கலாம். இது மாநில பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கர்நாடகா தொழில் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி கர்நாடகா பெருந்தொகையை செலவு செய்து மெட்ரோ ரயில் வசதியை அளிக்கும். அதை கச்சிதமாக தமிழகம் பயன்படுத்தி கொள்ள வேண்டுமா என்ற கேள்வியையும் முன்வைக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.