ஸ்டைலா, கெத்தா, மாஸா… லடாக் பைக் ட்ரிப் சென்ற ராகுல்.. 2கே கிட்ஸுக்கே போட்டியா?

லடாக்கில் ராகுல்காந்தி பைக் ஓட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ராகுல்காந்தி சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன. வயல் வெளியில் மக்களுடன் நாட்டு நட்ட புகைப்படம், லாரியில் டிரைவருடன் சேர்ந்து சென்றது, மெக்கானிக்குடன் இணைந்து பணியாற்றியது உள்ளிட்ட புகைப்படங்கள் அதிகமாக பேசுபொருளாகின.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் மீண்டும் ஒரு அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இப்போதைய 2கே கிட்ஸ்களுக்கு பைக்கில் லடாக் ட்ரிப் போக வேண்டும் என்பதுதான் உச்சபட்ச ஆசையாக இருக்கிறது. ஆனால், 70ஸ் கிட்ஸான ராகுல் காந்தி லடாக்கில் பைக் ட்ரிப் சென்றுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு லடாக் தனி யூனியன் பிரதேசமாக 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு முதல் முறையாக
காங்கிரஸ்
தலைவர் ராகுல்காந்தி லடாக் பயணம் மேற்கொண்டுள்ளார். 30 உறுப்பினர்களைக் கொண்ட லடாக் தன்னாட்சி மேம்பாட்டு கவுன்சிலுக்கு அடுத்த மாதம் தேர்தல் வருகிறது. பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

View this post on InstagramA post shared by Rahul Gandhi (@rahulgandhi)

இதனை மையப்படுத்தி லடாக்கிற்கு இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன் தினம் சென்றடைந்தார். ஆனால், அங்கு சென்ற பிறகு தனது பயணத்தை ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை விரிவுபடுத்திக்கொண்டார்.

லடாக் சென்ற ராகுல் காந்தி அங்கு லெக் பகுதியில் நேற்று 500 இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அரங்கம் முழுவதும் இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி லடாக்கில் இருந்து பாங்காங் ஏரிக்கு இன்று பைக்கில் பயணம் மேற்கொண்டார்.

பைக் ரேஸர் உடையில் ஹெல்மெட் அணிந்துகொண்டு ஸ்டைலிஷாக ராகுல் காந்தி பைக் ஓட்டும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ராகுல், “பாங்காங் ஏரிக்கு பைக்கில் சென்றுகொண்டிருக்கிறேன்.உலகின் மிகவும் அழகான பகுதிகளில் இதுவும் ஒன்று என எனது தந்தை கூறியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று இன்று இரவு சுற்றுலா கேம்ப்பில் தங்கும் ராகுல்காந்தி, நாளை தனது தந்தை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை அவருக்கு பிடித்த இடத்திலேயே கொண்டாடுகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.