Vivo V29e இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிப்பு! 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் ஸ்னாப்டிராகன் ப்ராசஸருடன் புத்தம் புது ஸ்டைலில்!

Vivo நிறுவனத்தின் அடுத்தகட்ட அதிநவீன மொபைலான Vivo V29e ஆகஸ்ட் 28ம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளதாக அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 12 மணியளவில் இந்த மொபைல் லான்ச்சிங் நிகழ்வு நடைபெற உள்ளது. அதற்குள் அந்த மொபைலின் சிறப்பம்சங்கள் என்ன, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Vivo V29e-ல் அதிநவீன ப்ராசஸர்

Vivo V29e மொபைலில் 8GB ரேமுடன் அதிநவீன Qualcomm Snapdragon 480 ப்ராசஸர் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா வசதிகள்

Vivo V29e மொபைலின் கேமரா வசதியை பொறுத்தவரை பின்புறம் இரண்டு ரியர் கேமராக்கள் 64 மெகாபிக்ஸல் , முன்புறம் 50 மெகாபிக்ஸல் கேமரா இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெரிய டிஸ்பிளே அமைவுகள்
6.78 இன்ச் FHD+ டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் இடம் பெறலாம்.

பேட்டரி திறன்

Vivo V29e மொபைலில் இடம்பெற்றுள்ள பேட்டரி 4600mAh திறன் கொண்டதாக இருக்கலாம்.

நிறங்கள்
இது வெளியாகும் போது ஆர்டிஸ்டிக் ரெட் மற்றும் ஆர்டிஸ்டிக் ப்ளூ ஆகிய நிறங்களில் வெளியாக உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Vivo V29e மொபைலின் விலை

Vivo V29e மொபைல் இந்திய மதிப்பில் 25,000 முதல் 30,000 என்ற விலையில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.