அதுக்குள்ள ஒரு வருஷம் ஆகிருச்சா.?: சொல்ல நிறைய இருக்கு: தனுஷ் நெகிழ்ச்சி.!

கடந்தாண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற படம் ‘திருச்சிற்றம்பலம்’. ரசிகர்கள் மத்தியில் பெரிதான எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தப்படம் வெளியானது. படத்தின் டிரெய்லர், போஸ்டர் எல்லாம் ரசிகர்களை பெரிதாக கவராத நிலையில் ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

மித்ரன் ஜவஹர், தனுஷ் இருவரின் கூட்டணியில் வெளியானது ‘திருச்சிற்றம்பலம்’. யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்தப்படத்தில் இருவரும் இணைந்தனர். இந்தப்படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் திரு என்ற கதாபாத்திரத்தில் தனுஷும், ஷோபனாவாக நித்யா மேனன் நடித்திருந்தனர். பேமிலி டிராமாவாக பீல் குட் பிலிமாக இந்தப்படம் வெளியானது. சிறு வயதில் இருந்து நண்பர்களாக பழகும் ஹீரோ, ஹீரோயின் காதலர்களாக இணைவது தான் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் கதை. வழக்கமான கதையம்சம் கொண்ட படமாக இருந்தாலும், ரசிகர்களிடையே வேறலெவல் வரவேற்பை பெற்றது இப்படம்.

இந்தப்படத்தின் மற்றொரு ஸ்பெஷலாக தனுஷும், அனிருத்தும் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்தனர். கடந்தாண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியான இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெளியாகி 1 ஒரு வருடம் நிறைவு செய்துள்ள நிலையில், அதனை கொண்டாடும் விதமாக தனுஷ், பிரகாஷ்ராஜ், நித்யா மேனன் மற்றும் இயக்குனர் மித்ரன் ஜவஹர் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

Dhanush: ‘டி50’ படத்தில் இணைந்த அஜித்தின் ரீல் மகள்: தனுஷின் வேறலெவல் பிளான்.!

இந்நிலையில் இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நடிகர் தனுஷ், நன்றி சொல்ல நிறைய இருக்கிறது. எங்கு துவங்குவது என்று தெரியவில்லை. இந்தப்படத்தை எங்களுக்காக சிறப்பாக உருவாக்கி தந்த அனைவருக்கும் நன்றி. திரு மற்றும் ஷோபனாவின் ஒரு வருடம் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகி வருவதை தொடர்ந்து ‘அதுக்குள்ள ஒரு வருஷம் ஆகிருச்சா? திரு, ஷோபனா சேர்ந்து இன்னொரு படம் பண்ணுங்க’ என கூறி வருகின்றனர் ரசிகர்கள்.

View this post on InstagramA post shared by Dhanush (@dhanushkraja)

தனுஷ் தற்போது தனது 50 வது படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை அவரே இயக்கி வருகிறார். ‘பவர் பாண்டி’ படத்திற்கு பிறகு மீண்டும் டைரக்ஷன் பக்கம் தனுஷ் திரும்பியுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இதனிடையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் தனுஷ் நடித்து முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Captain Miller: தனுஷின் இந்த மனசு யாருக்கு வரும்.?: ரசிகர்கள் நெகிழ்ச்சி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.