ஆளுநரை விடுங்க.. "நீங்க செருப்பால அடி வாங்கிருக்கீங்களா?" உதயநிதியை இறங்கி அடித்த நாராயணன் திருப்பதி

சென்னை:
நீட் விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக விமர்சித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக விமர்சித்தார். “நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டேன்னு ஆளுநர் பேசுறாரு. நீங்க யாரு இதை சொல்றதுக்கு? நீங்களே போஸ்ட்மேன் வேலையை பாக்குறீங்க. ரொம்ப திமிரா பேசுறாரு ஆளுநர். அவர் ஆளுநர் ரவி அல்ல. ஆர்எஸ்எஸ் ரவி. ஆளுநருக்கு நான் சவால் விடுக்கிறேன். தமிழ்நாட்டில் ஏதாவது தொகுதியில நின்னு உங்களால் ஜெயிக்க முடியுமா? மக்கள் செருப்பால அடிப்பாங்க” என உதயநிதி பேசினார்.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நாராயணன் திருப்பதி ஆவேசம்:
“ஆளுநருக்கு எவ்வளவு திமிர்.. எவ்வளவு கொழுப்பு.. நான் சவால் விடுகிறேன். ஆளுநருக்கு தைரியம் இருந்தால் தமிழ்நாட்டில் ஏதாவது தொகுதியில் நின்று அவரால் வெற்றி பெற முடியுமா.. உங்கள் கொள்கைகளை எடுத்து சொன்னா தமிழக மக்கள் உங்களை செருப்பால அடிப்பாங்க.” இப்படி பேசுனது ஒரு சாதாரண மூன்றாம் தர மேடை பேச்சாளர் அல்ல. தமிழ்நாட்டில் அமைச்சராக இருப்பவர்.. முதல்வரின் மகனாக இருக்கக்கூடிய உதயநிதி தான் இப்படி பேசி இருக்கிறார். வெட்கக்கேடான விஷயம் தமிழகத்தில் நடந்திருக்கிறது.

திமுக செருப்பால் அடி வாங்கியதா?
இப்படித்தான் அநாகரீகமாக, அருவருப்பாக, கீழ்த்தரமாக ஆளுநரை பேசுவீர்களா..? தேர்தலில் தோல்வி அடைவது என்பது மக்கள் செருப்பால் அடிப்பதற்கு சமமா? அப்படியென்றால், 1977, 1980, 1984, 1991, 2001, 2011, 2014, 2016 என பல முறை தேர்தலில் தோற்றிருக்கிறது திமுக. அப்படியென்றால், இத்தனை தடவை திமுகவினரை மக்கள் செருப்பால் அடித்தார்கள் என அர்த்தமா? ஒரு அமைச்சர்.. அதிலும் ஒரு முதலமைச்சரின் மகன் இப்படி பொறுப்பில்லாமல், அராஜகமாக பேசுவது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது உள்நோக்கத்துடன் பேசப்பட்ட ஒன்று.

உதயநிதியை நீக்க வேண்டும்:
தேர்தலில் தோற்றால் மக்கள் செருப்பால் அடித்ததற்கு சமம் என்றால்

அவர்களே, உங்கள் தந்தை கூட தேர்தலில் நின்று தோற்றவர்தான். உங்கள் அளவுக்கு நான் தரம்தாழ்ந்து பேச மாட்டேன். ஆனால் இதுபோன்ற பேச்சுகள் மக்களை தூண்டிவிடும் பேச்சுகள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயலை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். உடனடியாக உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். உதயநிதியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.