புதுடெல்லி: நைட் பிராங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள நகரங்களின் பட்டியலில் கூறியிருப்பதாவது: செலவு மிகுந்த நகரங்களின் வரிசையில் மும்பை முதலிடத்தில் உள்ளது.
மும்பையில், மக்கள் தங்கள் வருமானத்தில் 55 சதவீதத்தை வீட்டுக் கடனுக்கான மாதத் தவணைக்கு செலவிடுகின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் ஹைதராபாத் உள்ளது. அங்கு மாதத் தவணை – வருவாய் விகிதம் 31 சதவீதமாக உள்ளது. மூன்றாவது இடத்தில் டெல்லி (30%) உள்ளது.
பெங்களூரு மற்றும் சென்னையில் மாதத் தவணை – வருவாய் விகிதம் 28 சதவீதமாகவும், புனே மற்றும் மேற்கு வங்கத்தில் அது 26 சதவீதமாகவும் உள்ளது. அகமதாபாத்தில் அது 23 சதவீதமாக உள்ளது. அந்த வகையில், செலவு குறைந்த நகரமாக அகமதாபாத் திகழ்கிறது என்று நைட் பிராங்க் குறிப்பிட்டுள்ளது.