காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்திநகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜி20 நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாட்டில், உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ)தலைவர் டெட்ராஸ் அதானோம் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்தியாவில் மக்களுக்கான மருத்துவக் காப்பீடு குறித்தும் பேசினார்.
குறைந்த வருவானம் ஈட்டும் மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் நோக்கில் இந்திய அரசு 2018-ம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைக் கொண்டுவந்தது. இது உலகின் மிகப் பெரிய காப்பீட்டு திட்டம் என்று டெட்ராஸ் அதானோம் குறிப்பிட்டார்.
இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பு குறித்து மேலும் அவர்கூறுகையில், “நான் காந்திநகரில் உள்ள சுகாதார மையத்தைபார்வையிட்டேன். அந்த மையம்மூலம் 1,000 குடும்பங்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. தொலைபேசி மூலமும்மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. இந்தக் கட்டமைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு பரிமாற்றம் அடைந்து வருவதற்கான மிகச் சிறந்த உதாரணம் இது” என்று குறிப்பிட்டார்.