சாதாரண ஆளுனு நெனைச்சிட்டிங்களா..? கிட்ட கூட நெருங்க முடியாது.. அனல் பறக்க பேசிய எடப்பாடி பழனிசாமி

மதுரை:
“என்னை சாதாரண ஆளுனு நினைச்சீட்டிங்களா..?” என்று கேட்டு மதுரை மாநாட்டை தெறிக்கவிட்டார் அதிமுக பொதுச்செயலாளர்

.

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநில மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார். குறிப்பாக, தான் ஆட்சிக்கு வந்த போது முதல்வர் ஸ்டாலின் தன்னை ஏளனம் செய்ததையும், பின்னர் தான் வளர்ந்த பின்னர் அவர்களிடம் தென்பட்ட மாற்றங்களையும் எடப்பாடி பேசிய போது மாநாடே கரகோஷங்களால் நிரம்பியது. அவரது உரையின் ஒரு பகுதி:

நமது இதயதெய்வம் அம்மாவுக்கு (ஜெயலலிதா) நம்பிக்குரியவனாக இருந்தவன் நான். அம்மாவை இக்கட்டான சூழ்நிலைகள் சூழ்ந்த போது அவருக்கு பக்கபலமாக இருந்தவன் நான். அதனால்தான் அம்மா என் மீது எப்போதும் தனி அன்பை வைத்திருந்தார்கள். அம்மா மறைந்த பிறகு, நான் ஆட்சியில் அமர்ந்தேன். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், என்னை எப்படி எப்படி எல்லாம் கேலி பேசினார்.. எந்த பின்புலமும் இல்லாத இவரா ஆட்சியை நடத்த போகிறார் என்றும், 10 நாட்கள் கூட எடப்பாடி பழனிசாமியால் ஆட்சியை நடத்த முடியாது எனவும் கிண்டல் அடித்தார். ஆனால் என்ன நடந்தது? தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் பேராதரவுடன் 4 ஆண்டுகாலம் ஆட்சியை நிறைவு செய்தேன்.

மேலும், நான் ஆட்சி பொறுப்பேற்ற போது தமிழகம் முழுவதும் வறட்சி ஏற்பட்டிருந்தது. பல மாவட்டங்களில் குடிநீருக்கே கஷ்டப்படும் நிலைமை இருந்தது. அந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைத்து சாதனை புரிந்தது எனது தலைமையிலான அதிமுக ஆட்சி. அது மட்டுமா..? கொரோனா தொற்று மக்களை கொல்ல துடித்தது. அந்த கண்ணுக்கு தெரியாத எதிரியை கூட நிர்வாகத் திறமையால் வீழ்த்தினோம்.

என்னை சாதாரண ஆள் என்று நினைத்தீர்களா..? தொண்டர்களின் ஆதரவால் முதல்வராக உயர்ந்தவன் நான். மிகப்பெரிய இயக்கமான அதிமுகவின் தலைவனாக இருக்கிறேன். எந்தக் கொம்பன் நினைத்தாலும் அதிமுகவை அசைத்து கூட பார்க்க முடியாது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.