சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த போராட்டத்தில் அமைச்சராக வரவில்லை. உயிரிழந்தவர்களின் அண்ணனாக வந்திருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள். நீட் தேர்வால் உயிரிழந்த 21 பேரின் மரணம் தற்கொலை கிடையாது.

அது கொலை. அதற்கு துணை நின்றது அ.தி.மு.க. நீட் தேர்வு குறித்து கடந்த 5 ஆண்டுகளாக நான் நிறைய பேசி விட்டேன். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டால் பதவி பறிக்கப்படும் என்றுக்கூட என்னை அச்சப்படுத்தினார்கள். அ.தி.மு.க வழக்கறிஞர் என்மீது வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். எந்த இழப்பு வந்தாலும், என் பதவி பறிபோனாலும் பரவாயில்லை என்றே, இந்தப் போராட்டதில் பங்கெடுத்தேன்.
நீட் தேர்வில் வெற்றிப்பெற்றவர்களுடன் ஆளுநர் ரவி சந்தித்துப் பேசினார். அப்போது ஒரு பெற்றோர், இந்த நீட் தேர்வு தேவையில்லை, பொருளாதார வசதி பெற்றவர்களால் மட்டுமே நீட் தேர்வை வெல்லமுடிகிறது. எனவே இந்த நீட் தேர்வை எப்போது ரத்து செய்யப்படும் எனக் குரல் எழுப்பினார். அதற்கு, எவ்வளவு திமிரும், கொழுப்பு இருந்தால், ஆர்.என் ரவி i will ever,never என பதிலளித்திருப்பார். நான் கேட்கிறேன். அதை சொல்ல Who are you? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியா… நீங்கள் ஒரு போஸ்ட் மேன் அவ்வளவு தான்.

முதல்வர் சொல்வதை மத்திய அரசிடம் சேர்க்கும் பணிமட்டும்தான் உங்களுடையது. மரியாதை கொடுத்தால்… அதைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ஆர்.என். ரவியாக அல்ல, ஆர்.எஸ்.எஸ் ரவியாகதான் ஆளுநர் செயல்படுகிறார். உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு, உங்கள் சித்தாந்தத்தை மக்களிடம் கூறி தேர்தலை சந்தியுங்கள். அதில் வெற்றிப்பெற்றால், நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுவதற்கு நான் உங்களுடன் வருகிறேன்.
நீங்கள் சொல்வதை நானே செய்கிறேன். இறந்த மாணவனின் வீட்டுக்குச் சென்றபோது, தம்பி பயாசுதீன் என்னை எதிர்த்துக் கேள்வி கேட்டார். அவரையே இப்போது எனது மேடையில் ஏற்றி பேச வைத்தேன். இந்த தைரியம் கூட இல்லாத ஆளுநர், அவரை எதிர்த்து கேள்வி கேட்ட அந்தப் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிரட்டல் விடுகிறார்கள். அவருடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம். இதுதான் ஆரம்பம்… முடிவல்ல.

பா.ஜ.க தலைவர் ஒருவர், நேற்று பேட்டியில்,’பொதுத்தேர்வு ரிசல்ட் வந்தாலும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள். தி.மு.க நடத்தும் இந்தப் போராட்டமே தேவையற்றது’ எனத் தெரிவித்திருக்கிறார். அனிதாவின் பொதுத் தேர்வு மதிப்பெண் பற்றி அவருக்குத் தெரியுமா… நான் சொல்கிறேன். தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க-வே தேவையற்றதுதான். தமிழக மக்கள் அ.தி.மு.க வையும், பா.ஜ.க-வையும் மன்னிக்கவே மாட்டார்கள். மதுரையில் நடக்கும் விழாவில் அ.தி.மு.க நீட் தேர்வை எதிர்த்து ஒரே ஒரு தீர்மானம் நிறைவேற்றட்டும் பார்க்கலாம்…. நீட் விவகாரத்தில் அரசியல் செய்ய நான் விரும்பவில்லை.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs
நீட் ரத்துக் குறித்து நாங்களும் வாக்குறுதி அளித்தோம், நீங்களும் வாக்குறுதி அளித்தீர்கள். எனவே, எடப்பாடி அவர்களிடம் கெஞ்சிக்கேட்கிறேன். உங்கள் மாணவர் அணிச் செயலாளரை அனுப்புங்கள், நாம் சேர்ந்து, டெல்லி பிரதமர் வீட்டின் முன் அமர்ந்து போரட்டத்தை முன்னெடுப்போம். நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால், அது உங்களின் முழு முயற்சியால் நடந்தது என அதன் முழுப் பொறுப்பையும் நீங்களே எடுத்துக்கோள்ளுங்கள். உங்கள் தலைவரை இரும்புப் பெண்மணி எனக் கூறிக்கொள்ளும் நீங்கள், குறைந்தபட்சம் ஒரு பித்தளை அல்லது பிளாஸ்டிக் மனிதராகவாவது இருக்க வேண்டாமா?
நீட்டை எதிர்த்து தைரியமாக குரல் கொடுங்கள்… எனக் கேட்கிறோம். ஆனால், உண்மையில் அ.தி.மு.க- தலைவர்கள் மோடி, அமித் ஷா செய்து வைத்த களிமண்ணாகதான் இருக்கிறார்கள். மாணவர்களே, கொஞ்சம் பொறுமையாக இருங்கள். மாடு பிடிப்பதற்கு சண்டை போட்டோம்.. மாணவர்களுக்காக, கல்விக்காக சண்டை போட மாட்டோமா… வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வை ஓட ஓட விரட்டியப் பின், மத்தியில் ஆட்சி மாற்றம் அமைந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருக்கிறார். இந்தப் போராட்டம் முடிவல்ல, விரைவில் டெல்லியில் சந்திப்போம்.” எனக் குறிப்பிட்டார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs