வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: இந்தியாவில் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஜெர்மன் அமைச்சர் ஒருவர் யு.பி.ஐ., மூலம் பணம் செலுத்தும் வீடியோவை ஜெர்மன் தூதரகம் வைரலாக்கி உள்ளது.
![]() |
பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் நாடு முழுவதும் அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. சிறிய கடைகள் முதல் பெரிய மால்கள் வரையிலும் நாள்தோறும் யு.பி.ஐ., மூலம் பணம் செலுத்தும் முறை அதிகரித்து வருகிறது. இதன் ஒருபடியாக ஜெர்மன் அமைச்சர் ஒருவரும் இந்த யு.பி.ஐ., யை பயன்படுத்தி பொருட்களை பெற்றுள்ளார்.
![]() |
இது குறித்து ஜெர்மன் தூதரகம் வீடியோ மற்றும் போட்டோக்களை வைரலாக்கி உள்ளது. தொடர்ந்து அவை இந்தியாவுக்கான வெற்றி கதைகளில் ஒன்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: பெங்களூருவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் விஸ்சிங் வந்திருந்தார். மாநாட்டின்இடையே அமைச்சர் நகரின் வீதிகளில் பொருட்களை வாங்கினார். பொருட்களுக்கான பணத்தை யு.பி.ஐ., மூலம் செலுத்தினார் எனவும், யு.பி.ஐ.,கட்டணங்களின் எளிமையை முதலில் அனுபவிக்க முடிந்தது. இந்த அனுபவத்தால் மிகவும் கவரப்பட்டார்” என பதிவிட்டு உள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதார புரட்சியின் ஒரு பகுதியாக யுபிஐ இருப்பதற்கு நன்றி.
உலகளவில் உள்ள யுபிஐ களத்தில் ஜெர்மனி இணைவது எப்போது என சமுகவலைதள பாலோயர்கள் சுலோசனை தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement