பெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இந்து தர்மத்தில், சுமங்கலிப் பெண்கள் சேர்ந்து செய்யும் விசேஷ பூஜைதான் வரலட்சுமி விரத பூஜை. வேண்டும் வரத்தை அருள்பவள் வரலட்சுமி. அஷ்டலட்சுமிகளின் ஐக்கிய ஸ்வரூபமே வரலட்சுமி திருவடிவம். வரலட்சுமியை விரதமிருந்து பூஜித்தால், குடும்பம் குறைவின்றி சிறக்கும். இந்த விரதம் குறித்த பல தகவல்களை வழங்குகிறார் பாரதி ஸ்ரீதர்.
