சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், வரும் செப்.15-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
இதுவரை நடந்த முகாம்கள் வாயிலாக மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் முகாம் வாயிலாக பெறப்பட்டுள்ளன. களஆய்வுக்கு வரும் அலுவலர்களுக்கு விண்ணப்பதாரர்கள் உரிய தகவல்களை அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.