சின்ன பையன் இஷான் கிஷனுக்காக சீனியர் தவானை ஒரங்கட்டிய ரோகித்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திலக் வர்மா, இஷான் கிஷன் உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. இதனால் இரண்டு வீரர்களுமே அப்செட்டில் இருக்கிறார்கள். தவானைப் பொறுத்தவரை ரோகித் சர்மாவுடன் நீண்ட காலமாக ஓப்பனிங் இறங்கி விளையாடினார். ஆனால், கடந்த ஒரு வருடமாக அவர் இந்திய அணியில் இடம்பெறவே இல்லை. அவருக்கு பதிலாக சுப்மான் கில் மற்றும் இஷான் கிஷன் மட்டுமே அணியில் சேர்க்கபட்டு வருகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக சீனியர் பிளேயரான தவானை இந்திய அணியில் ஓரம் கட்டி வருவதாக கேப்டன் ரோகித் சர்மா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கேற்ப இப்போது இருக்கும் இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் ரோகித், இஷான், திலக், சூர்ய குமார் மற்றும் பும்ரா உள்ளிட்ட 5 பிளேயர்கள் இடம்பிடித்துள்ளனர். இதனை குறிப்பிடும் ரசிகர்கள் இஷானுக்கு பதிலாக தவானுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம், அவர் நன்றாக தானே விளையாடிக் கொண்டிருந்தார் என கேள்வி எழுப்பியுள்ளனர். 

இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம் கேட்டதற்கு, தவான் சிறந்த பிளேயர் தான். ஆனால் இப்போதைக்கு சுப்மன் கில், இஷான் கிஷன் மற்றும் ரோகித் மட்டுமே எங்களுடைய ஓப்பனிங் பிளேயர்கள் என முடிவு எடுத்து வைத்திருக்கிறோம் என தெரிவித்துவிட்டார். அதன்படி, தவானுக்கான இந்திய அணி வாய்ப்பு என்பது கிட்டத்தட்ட அடைக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் அவரை பிசிசிஐ எடுக்கவில்லை. இதனால் இனி இந்திய அணியில் தவான் விளையாடும் வாய்ப்பு பெறுவாரா? என்பதே சந்தேகத்தில் தான் இருக்கிறது. 

இந்நிலையில், உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஷிகர் தவான், நிச்சயமாக அது விராட் கோலி தான் எனக் கூறியுள்ளார். அவர் பேய் போல் ரன்களை குவித்துக் கொண்டிருக்கிறார் என கூறியிருப்பதுடன் பாபர் அசாம் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கோலிக்கு பிறகு தான் என தெரிவித்துள்ளார்.   

சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் மிட்செல் ஸ்டார்க் என கூறியிருக்கும் தவான், சுழற்பந்துவீச்சாளர்களில் ரஷித் கானை கூறியுள்ளார். ஷாகீன் அப்ரிடியா? ராபாடா? என கேட்டால் என்னை பொறுத்தவரை ரபாடாவை தேர்ந்தெடுப்பேன் என தவான் கூறியுள்ளார். மேலும், ஆசிய விளையாட்டு போட்டிகளிலாவது என் பெயர் இருக்கும் என நினைத்திருந்தபோது, அதிலும் என்னுடைய பெயர் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், இருப்பினும் ருதுராஜ் தலைமையில் விளையாடும் அணியில் இடம்பெற்றிருக்கும் அனைத்து இளம் வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள் என கூறியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.