தங்கவயல்: அறிவிக்கப்படாத மின் தடையை கண்டித்து, தங்கவயலில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கவயலில், கடந்த மூன்று மாதங்களாக அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின் தடை செய்து வருகின்றனர். இதனால், விவசாய நிலங்களில் பம்ப்செட் இயக்க முடியாமல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, தங்கவயல் பெஸ்காம் அலுவலகம் முன், விவசாயிகள் சங்கத்தினர் நேற்று தர்ணா நடத்தினர்.
விவசாயிகள் சங்கத் தலைவர் சந்திரகுமார் பேசியதாவது;
கோலார் மாவட்டத்தில் மூன்று மாதங்களாகவே மின் தடை செய்யப்படுகிறது. மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை மின் தடை செய்யப்படுவதால் அனைத்து வீடுகளிலும் சமையல் செய்யக் கூட முடிவதில்லை.வீட்டில் பிள்ளைகள் படிக்க முடிய முடியவில்லை.
மாலையில் மட்டுமின்றி, எல்லா நேரத்திலும் மின் தடை செய்வதே வழக்கமாகி உள்ளது.’கிரஹ ஜோதி’ திட்டம் அறிவிப்பு எப்போது வந்ததோ, அதன் பிறகு தான் பெரும்பாலும் மின் தடை செய்யப்படுகிறது.
மின் தடைக்கு காரணம் கேட்டால், அதிகாரிகள் உரிய பதில் தருவதில்லை.’மின் உற்பத்தி குறைவு; எங்களுக்கு மின் சப்ளை இல்லை’ என, பொறுப்பற்ற பதில்களை தருகின்றனர்.
தங்கவயலில் 200 யூனிட் இலவச மின்சாரம்ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு வழங்கப்பட வில்லை. மின்கட்டண ரசீதுகளே இதற்கு சாட்சியாகும்.மின் வினியோகம் செய்வதில் கர்நாடக அரசு தோல்வி அடைந்துள்ளது.மின் தடை நேரத்தை, முன்னதாகஅறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.
பின், கோரிக்கை மனுவை தங்கவயல் பெஸ்காம்செயற்பொறியாளர் ரமேஷிடம் அளித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement