சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் சேனக பியன்வில பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.இந்த சந்திப்பு கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று (22) இடம்பெற்றது.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி அன்று நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட எயார் வைஸ் மார்ஷல் பியன்வில அண்மையில் பதவியேற்றதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதுவரை காலமும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகேவின் வெற்றிடத்திற்கே எயார் வைஸ் மார்ஷல் பியன்வில புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.