'தங்கலான்' மேஜிக்.. சம்பவம் செய்துள்ள பா. ரஞ்சித்: மரண மாஸ் அப்டேட்.!

‘தங்கலான்’ படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் கொடுத்துள்ள அப்டேட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தங்கலான்கோலிவுட் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட ரிலீசாக ‘தங்கலான்’ வெளியாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் விக்ரம் நடிப்பில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் பா. ரஞ்சித். இந்தப்படம் குறித்து அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகும் தகவல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பல மடங்கு அதிகரிக்க செய்து வருகிறது.
பா. ரஞ்சித்தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சமூக நீதி பேசும் படங்களை இயக்கி வருபவர் பா. ரஞ்சித். கடைசியாக இவர் இயக்கியிருந்த ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் தற்போதைய காதல் குறித்த பல கோணங்களை பேசியிருந்தார் ரஞ்சித். இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது ‘தங்கலான்’ படத்தினை இயக்கி வருகிறார். நடிகர் விக்ரமும் ‘பொன்னியின் செல்வன்’ வெற்றியை தொடர்ந்து இந்தப்படத்தில் நடித்து வருகிறார்.
ஜிவி பிரகாஷ் குமார்மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் உருவாகி வரும் இந்தப்படம் குறித்து அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘தங்கலான்’ படம் குறித்து பேசும் போது, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தினை போன்று படத்தில் இசைக்கு ஏகப்பட்ட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கல்ட் சினிமாமேலும் ஒவ்வொரு முறையும் காட்சிகளை பின்னணி இசையுடன் பார்க்கும் போது மேஜிக் நடப்பதை போன்று உணருவதாகவும், வரலாறு, கற்பனை, இனம் ஆகியவை குறித்து அதிக பட்ஜெட்டில் படம் உருவாகி வருவதால் கல்ட் ஆக இருக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் படத்தில் பண்டைய, பழக்குடியினர் இசை இருப்பதாகவும், பா. ரஞ்சித் சாரின் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார் ஜிவி பிரகாஷ் குமார்.
எகிறும் எதிர்பார்ப்புஅவரின் இந்த பேட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. எப்படியும் ‘தங்கலான்’ படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தில் விக்ரம், பார்வதி திருவோத்து, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும் கோலார் தங்க வயல் பின்னணியில், அங்கு பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘தங்கலான்’ படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.