சென்னை : சந்திரயான்3 இன்று (23 ம் தேதி) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதனையடுத்து பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தலைவர்கள் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:
பலரும் பார்க்காத நிகழ்வு.இளைய தலைமுறைக்கு இந்த சாதனை பெரியஉந்து சக்தியை கொடுத்துள்ளது. 3 மணி நேரத்திற்கு பிறகு பலரும் பார்க்காத ஒரு நிகழ்வை காண உள்ளோம். இளைய தலைமுறைக்கு இந்த சாதனை பெரிய உந்து சக்தியை கொடுத்துள்ளது. நம்பி நாராயணன்
இந்தியா இப்போது நிலவில் உள்ளது. நிலவின் தென்துருவத்தில் இந்தியா தரையிறங்குகிறது. இந்திய விஞ்ஞானிகள் விண்வெளி சகாப்தத்தின் தலைவர்கள் : நிர்மலா சீதாராமன்
பெயரிடப்படாத நிலவின் தென் துருவத்தில் மென்மையான தரையிறக்கம் என்பது நமது விஞ்ஞான சமூகத்தின் பல தசாப்த கால அளப்பரிய புத்தி கூர்மை மற்றும் கடின உழைப்பின் விளைவு ஆகும். 1962 ம் ஆண்டில் முதல் இந்தியாவின் விண்வெளி திட்டம் புதிய உயரங்களை அளந்து இளைய தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது: ராகுல்
![]() |
சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். ஒட்டுமொத்த குழுவின் அயராத முயற்சிகள் மற்றும் புதுமைக்கு பாராட்டுக்கள்.இந்தியாவின் அயராத முயற்சிக்கு பாராட்டுக்கள்: முதல்வர் ஸ்டாலின்
100 கோடி கனவுகளின் எதிர்காலம் நிலவி்ல் வெற்றிகரமாக தரையிறங்கியது : அண்ணாமலை
இந்தியாவின் பெருமையை உயர்த்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்: தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை.
* வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை நிகழ்த்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு: மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே
* விண்வெளியில் நாம் சரித்திரம் படைத்த புதிய இந்தியாவை வடிவமைத்துள்ளோம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.
* பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா எழுச்சி கண்டுள்ளது: இந்த நாடு பெருமை கொள்கிறது: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்
* இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி: தேசியவாத காங்., தலைவர் சரத்பவார்.
* வரலாற்றில் சிறப்பு மிக்க நிகழ்வு ஏற்படுத்திய இஸ்ரோவிற்கு வாழ்த்துக்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்.
* இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனதார்ந்த வாழ்த்துக்கள்: கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்.
* இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழத்துக்கள்: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்