ஹோட்டல் அறையில் மறைத்து வைக்கப்பட்ட கேமரா: அதிர்ச்சி அடைந்த ஜி.வி. பிரகாஷ் பட நடிகை

கடந்த 2009ம் ஆண்டு வெளியான போனி தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் டெல்லியை சேர்ந்த க்ரித்தி கர்பந்தா. ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான ப்ரூஸ் லீ படம் மூலம் கோலிவுட் வந்தார். அதன் பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

ஜெயிலர் இன்னும் பாக்கல, ஆனால்.. Vijay Devarkonda..
தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தார். தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அந்த பேட்டியில் க்ரித்தி கர்பந்தா கூறியிருப்பதாவது,

நான் கன்னட படம் ஒன்றில் நடித்தபோது நடந்த சம்பவம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நான் தங்கியிருந்த ஹோட்டலில் வேலை செய்த பையன் என் அறையில் கேமரா வைத்துவிட்டு சென்றார். நான் எந்த ஹோட்டலில் தங்கினாலும் அங்கு கேமரா எதுவும் இருக்கிறதா என நானும், என் குழுவும் சோதிப்பது வழக்கம்.

செட் டாப் பாக்ஸுக்கு பின்னால் அந்த பையன் கேமரா வைத்ததை கண்டுபிடித்தோம். எதற்கெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. அந்த பையன் கேமராவை முழுவதுமாக மறைத்து வைக்காததால் கண்டுபிடித்தோம்.

ஒருமுறை ஒருவர் என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்றார். நானும் சரி என்றேன். அவர் என்னை தொட்டதுடன் கிள்ளி வைத்துவிட்டார். அவர் கிள்ளியதில் எனக்கு ரத்தக்கட்டே ஆகிவிட்டது. என்னை கிள்ளிவிட்டு அவர் ஓடிவிட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்ன செய்வது என்றே தெரியவில்லை.

பெங்களூருவில் சாலையில் நான் நடந்து சென்றபோது பைக்கில் வந்த ஒருவர் என் பின்னால் தட்டினார். அவர் தட்டிய வேகத்தில் நான் கீழே விழுந்துவிட்டேன். அவரோ எதுவுமே நடக்காதது போன்று சென்றுவிட்டார். அந்த சம்பவம் குறித்து என் பெற்றோரிடம் கூட சொல்ல முடியாமல் தவித்தேன். பல மாதங்கள் கழித்து தான் என் பெற்றோரிடம் தெரிவித்தேன்.

புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என வந்து என்னை கண்ட இடத்தில் தொட்டது பலமுறை நடந்திருக்கிறது. அப்படி புகைப்படம் எடுத்துவிட்டு கிள்ளிய நபர் செய்த காரியத்தை நினைத்தால் தற்போது கூட பயமாக இருக்கிறது என்றார்.

க்ரித்தி கூறியதை கேட்ட ரசிகர்களோ, ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். தற்போது எங்கு கேமரா வைத்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வைக்கிறார்கள். அதனால் ஹோட்டல்களில் தங்கினால் உஷாராக இருங்க க்ரித்தி என தெரிவித்துள்ளனர்.

2023ல் அதிக லாபம் கொடுத்த படம்: ஜெயிலர் இல்ல, எதுனு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க

தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை பாலிவுட் நடிகர் புல்கிட் சாம்ராட்டை காதலித்து வருகிறார் க்ரித்தி கர்பந்தா. கடந்த 2019ம் ஆண்டில் இருந்து அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள்.

க்ரித்தி படங்கள் தவிர்த்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பிற பாலிவுட் பிரபலங்களை போன்றே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் க்ரித்திக்கு 8.1 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.