சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் புதிய உத்தரவு… சரியா 14 நாட்கள் தான்… ரிப்போர்ட் வேண்டும்… ஆட்சியர்கள் அலர்ட்!

தமிழகத்தை பொறுத்தவரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்பவை பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்குவதில் முதுகெலும்பாக திகழ்கின்றன. இந்த சேவையானது ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களை சொல்லலாம். எனவே இவற்றில் தடையற்ற மருத்துவ சேவையை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாக உள்ளது.

சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் உத்தரவுஇதையொட்டி மாவட்ட ஆட்சியர்கள் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு தரமான மருத்துவ சேவை கிடைக்கவும், நவீன மருத்துவ உபகரணங்கள் மூலம் சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதும் அவசியம். இதை வலியுறுத்தி தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.​மொத்தம் 4 விஷயங்கள்அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்ட உத்தரவில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நேரில் செல்லும் போது பணியாளர்களின் இருப்பு, சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள், மருத்துவ சேவைகள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமெனில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், துணை செவிலியர்கள், களப் பணியாளர்கள் ஆகியோர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வுஇதையடுத்து சுகாதார நிலையங்களில் வெளிப்புற நோயாளிகள் தொடர்பான பதிவேட்டை ஆய்வு செய்ய வேண்டும். பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கக்கூடிய மருத்துவ சேவை, பிரசவங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். மேலும் கருத்தடை திட்டங்கள், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நபர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பற்றிய விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும்.​தடுப்பூசியும், தாய் -சேய் நலத்திடமும்இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி முறையாக போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதுதவிர தாய் – சேய் நலத்திற்கான விரிவாக்கப்பட்ட சிறப்பு திட்டம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், தொற்றா நோய்களான கர்ப்பப்பை வாய் பரிசோதனை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு மேலாண்மை உள்ளிட்ட திட்டங்களின் நிலையை அறிய வேண்டும்.​உள்கட்டமைப்பு வசதிகள்மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், தூய்மை நிலவரம் ஆகியவற்றை ஆய்வு செய்வது அவசியம். குறிப்பாக கழிப்பறை வசதிகள். அரசு கட்டிடங்களில் கழிப்பறைகள் சரியாக பராமரிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதுபோன்ற நிலை ஏற்படாதவாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பார்த்து கொள்ள வேண்டும். மருத்துவ உபகரணங்களின் பராமரிப்பு, அவற்றின் செயல் திறன், அத்தியாவசிய மருந்துகள் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் அறிக்கைஇவ்வாறு ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளருக்கு செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் சமர்ப்பித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.