தற்போது 69 தேசிய விருது விழாவிற்கான அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. இதையடுத்து தமிழில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகின்றது. அந்த வகையில் ஜெய் பீம் படத்தில் நடித்த சூர்யாவிற்கும், கர்ணன் படத்தில் நடித்த தனுஷிற்கும் விருதுகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன
2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அந்த ஆண்டில் வெளியான பல படங்கள் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும் பலர் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்துள்ளனர்.
ஆறு வருடங்களை நிறைவு செய்த விவேகம்..மொத்தமாக இத்தனை கோடி வசூலித்துள்ளதா ?
அந்த வகையில் சார்பட்டா பரம்பரை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஆர்யா, மாநாடு படத்தில் சிம்பு, ஜெய் பீம் படத்தில் மணிகண்டன் மற்றும் சூர்யா, கர்ணன் படத்தில் தனுஷ் என பலர் தேசிய விருதுக்கான போட்டியில் இருக்கின்றனர். இதில் முன்னிலையில் இருப்பது சூர்யா மற்றும் தனுஷ் தான் என தகவல்கள் வருகின்றன.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் திரையில் வெளியானது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படத்தில் தனுஷ் வழக்கம் போல தன் சிவப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதே போல ஞானவேலின் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் படத்தில் சூர்யா அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
இதையடுத்து இப்படம் நேரடியாக OTT யில் வெளியானது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தான் சிறந்த நடிகருக்கான தேசிய விருது போட்டியில் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் ஏற்கனவே தேசிய விருதை வென்றுள்ளனர். தனுஷ் 2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்திற்காகவும், 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் படத்திற்காகவும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
அதே போல சூர்யா சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். எனவே இவர்கள் ஒருவர் மீண்டும் தேசிய விருதை பெறுவார்களா ? இல்லை ஆர்யா ,சிம்பு ஆகியோர் விருதை வெல்வார்களா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்