
ரஜினி 170 எப்போது துவங்குகிறது
'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். அமிதாப் பச்சன், சர்வானந்த், பஹத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது விறுவிறுப்பாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தொடக்க விழா பூஜையை வருகின்ற ஆகஸ்ட் 26ம் தேதி நடத்த படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக லைகா உரிமையாளர் சுபாஸ்கரன் சென்னை வருவதாக கூறப்படுகிறது. மேலும், இதன் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.