69வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளன. மத்திய அரசு ஒவ்வோர் ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது.
சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு ஐந்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’க்கு மூன்று விருதுகளும், ‘மண்டேலா’வுக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் 69 தேசிய விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்படுகிறது. இந்தாண்டு தமிழில் இருந்து சூர்யாவின் ‘ஜெய்பீம்’, பா.ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’, தனுஷின் ‘கர்ணன்’ உள்பட 35க்கும் மேற்பட்ட படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் சிறந்த பொழுதுபோக்கு படம் என்ற பிரிவிற்கு விஜய்யின் ‘மாஸ்டர்’ படமும் அனுப்பட்டுள்ளது.

அதைப் போல இந்தியில் இருந்து ‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘ராக்கெட்ரி’, ‘கங்குபாய்’ மலையாளத்தில் இருந்து ‘மின்னல் முரளி’, ‘ஹோம்’, ‘நயாட்டு’, தெலுங்கில் இருந்து ‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘புஷ்பா’ ஆகிய படங்களும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த படங்கள் அத்தனையுமே கடந்த 2021ல் சென்சார் செய்யப்பட்ட படங்களாகும். இந்த ஆண்டு தமிழ் படங்கள் நிறைய விருதுகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பசுபதி, மணிகண்டன் போன்ற நடிகர்களில் ஒருவருக்கு விருது கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.