National film awards : 2021க்கான தேசிய சினிமா விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது ! வெல்லப்போவது இவர்களா ??

இந்திய சினிமாவில் முக்கியமான விருதுகளில் ஒன்றுதான் தேசிய திரைப்பட விருது. இந்த விருதுகள் சிறந்த நடிகர்கள், சிறந்த திரைப்படம், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதாகும். அந்த வகையில், 2021ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருது தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது. இந்த ஆண்டு நடக்கும் தேசிய திரைப்பட விருது விழா 69வது வருடமாகும். இந்த விழா 2021ஆம் ஆண்டிற்கான விருது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை அறிவிப்பாகும் 69வது தேசிய திரைப்பட விருது 2021இல் தமிழ் சினிமாவில் இவர்களெல்லாம் வெற்றிபெறுவதற்கு வாய்ப்புள்ளது என்னும் கணிப்புகள் தெரியவந்துள்ளது. யாரெல்லாம் இருக்கிறார்கள், எந்த படத்திற்காக இருக்கிறார்கள் என பார்க்கலாம்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன்

சிறந்த தமிழ் சினிமாவிற்கான தேசிய திரைப்பட விருதை இந்த குறிப்பிட்ட படங்களில் பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற கர்ணன் படம் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. கர்ணன் படம் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை சிறந்த படத்திற்கான விருதை வெல்லும் என்னும் லிஸ்டில் இடம்பெற்றிருக்கிறது. இந்த படம் ஆர்யாவின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாகும். இத்தனை ஆண்டுகள் நாம் பார்த்து வந்த ஆர்யாவை வேறு ஒரு பரிணாமத்தில் இந்த படத்தில் பார்க்கமுடிந்தது.

TJ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம்

இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் தான் ஜெய் பீம். நீதியரசர் சந்துருவின் வழக்குகளில் ஒன்றை படமாக்கி இருப்பார் இயக்குனர். சூர்யா நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படம் வெளியானபோது சில தரப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் வெளியானது. இந்த படமும் தேசிய சினிமா விருது வழங்கும் சிறந்த படத்திற்கான விருதை வெல்லலாம் என்னும் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

சமுத்திரக்கனி இயக்கி நடித்த வினோதய சித்தம்

இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில், சமுத்திரக்கனி , தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிப்பில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான திரைப்படம்தான் வினோதய சித்தம். இந்த படமும், தேசிய விருதுகளில் சிறந்த படத்திற்கான விருதை பெறலாம் என கூறப்படுகிறது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், SJ சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாநாடு. இந்த படம் தமிழ் சினிமாவில் முற்றிலும் மாறுபட்ட வகையில் எடுக்கப்பட்டது. டைம் லூப் படமாக உருவாக்கப்பட்ட இந்த படம் பார்வையாளர்களை இம்ப்-ரெஸ் செய்துள்ளது. இந்த படமும் சிறந்த படத்திற்க்கான விருதை தேசிய திரைப்பட விருது விழாவில் பெற வாய்ப்புள்ளது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

சிறந்த நடிகருக்கான விருதை இவர்களில் பெறலாம் என்னும் லிஸ்டும் தெரியவந்துள்ளது.

சிறந்த நடிகர்களின் கணிப்புகள்

ஜெய் பீம் படத்தில் ஜஸ்டிஸ் சந்துரு வேடத்தில் செங்கேணிக்காக குரல் குடுக்கும் சூரியா சிறந்த நடிகருக்கான விருதை பெற வாய்ப்புள்ளது. அதே படத்தில், ராஜாகண்ணுவாக நடித்த மணிகண்டன் சிறந்த துணை நடிகர் என்ற விருது பெற வாய்ப்புள்ளது. கர்ணன் படத்தில், தன் கிராம மக்களுக்காக போராடும் கர்ணன் கதாபாத்திரத்தில் வாழ்ந்த நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை பெறுவார் எனக் கூறப்படுகிறது.

சூர்யா – சுதா கோங்குரா, கூட்டணி படத்தின் அலறவைக்கும் சில அப்டேட்ஸ் !!

சிறந்த துணைநடிகர்களின் கணிப்புகள்

இயக்குனர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் சார்பட்ட பரம்பரை படத்தில் கதாநாயகனாக நடித்த ஆரியா சிறந்த நடிகருக்கான விருதையும், அதே படத்தில் வாத்தியாராக நடித்த பசுபதி சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெற வாய்ப்புள்ளதாக கோபுரப்படுகிறது.

இந்த கணிப்புகளும், லிஸ்டும் சரியாக இருந்தால் இவர்களுல் விருதை வாங்குவார்கள். மேலும், இன்று மாலை 5 மணிக்கு விருதுகள் யார் யார் வாங்க போகிறார்கள் என்னும் தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Guest Author : Radhika Nedunchezhian

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.