`Please Remember.. You are just a Post Man..!’

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கோவை வருகை தரவுள்ளார். இந்நிலையில், பொள்ளாச்சி நகர திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ‘நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வெறும் போஸ்ட் மேன் மட்டுமே. கெட்அவுட் Mr.R.N Ravi.’ என்று குறிப்பிடப்படுள்ளது. அண்மையில் சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த கருத்துகளை கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில முற்போக்கு அமைப்புகள் சார்பில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி போராட்டமும் நடைபெறுகிறது. இதனால் கோவையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.