விஜயவாடா: ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் டிவிஎஸ் ஷோ ரூம் உள்ளது. இது, முதன்மை கிளை அலுவலகம் என்பதால் இங்கு நூற்றுக்கணக்கான பைக்குகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. மேலும் இங்கு பைக் சர்வீஸ் செய்யும் பகுதியிலும் மோட்டார் பைக்குகள் இருந்தன.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் ஷோ ரூமின் முதல் மாடியில் தீப்பற்றியது. தீ மளமளவென கீழ் தளத்திற்கும் இரண்டாவது மாடியில் உள்ள குடோனுக்கும் பரவியது.
இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்புப் படையினர் அங்குவிரைந்து சென்றனர். நீண்ட நேரம் போராடி அவர்கள் தீயைஅணைத்தனர். எனினும் இதற்குள் சுமார் 300 பைக்குகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.