ரஷ்ய அதிபர் திடீர் முடிவு| The Russian president made a sudden decision

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. 18 மாதங்களை கடந்தும் போர் நீடித்து வருகிறது.

இதில் உக்ரைனைச் சேர்ந்த அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புடினை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் வாரன்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் கைது நடவடிக்கையை தவிர்க்கவே, நேற்று முன்தினம் நடந்து முடிந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாட்டில், அதிபர் புடின் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்றார்.

இந்நிலையில், அந்நாட்டு அரசின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அதிபர் விளாடிமிர் புடின், ஜி – 20 மாநாட்டில் நேரடியாக பங்கேற்கும் திட்டம் எதுவும் இல்லை.

எனினும், அவர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.