"வேர்ல்ட் கப்ப அப்டியே தூக்கிட்டு வந்திடலாம்னு நினைச்சேன்!" – பாரிஸில் ஐசிசி விழாவில் நடிகை மீனா

பிரபல நடிகையான மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “இந்தியாவின் முதல் நடிகராக உலகக்கோப்பையை அறிமுகப்படுத்தி வைப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்!” எனக் கூறி ஈஃபிள் டவர் முன்பாக உலகக்கோப்பையுடன் நிற்பது போல ஒரு புகைப்படத்தையும் நடிகை மீனா பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவு இணையத்தில் வைரலானது. மீனாவுக்கும் கிரிக்கெட்டும் என்ன சம்பந்தம், இந்தச் சம்பவம் எப்படி எப்போது நிகழ்ந்தது என ரசிகர்களுக்கு எக்கச்சக்க கேள்விகள் எழுந்தன. ரசிகர்களின் கேள்விகளுக்கு விடை கொடுக்கும் வண்ணம் நடிகை மீனாவையே தொடர்புகொண்டு பேசினோம்.

மீனா

இந்த நிகழ்வு குறித்து அவர் பேசியவை, “ஐ.சி.சி சார்புல சில அதிகாரிகள் என்னைத் தொடர்புகொண்டு வேர்ல்ட் கப்ப அறிமுகப்படுத்தி வைக்கணும்னு கேட்டுக்கிட்டாங்க. அது ஒரு நல்ல மகிழ்ச்சியான விஷயம் அப்டிங்றதுனால நானும் ஒத்துக்கிட்டேன். ஆகஸ்ட் 19-ம் தேதி பாரிஸ்ல அந்த நிகழ்ச்சி நடந்துச்சு. கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், ஐ.சி.சி அதிகாரிகள் மற்றும் ரசிகர்கள்னு பல பேரு அந்த நிகழ்ச்சில கலந்துக்கிட்டாங்க. அந்தத் தருணத்துல ரொம்பவே பெருமையா ஃபீல் ஆச்சு.

வேர்ல்ட் கப் பக்கத்துல நின்னு ஃபோட்டோ எடுத்தப்ப அதை அப்படியே இந்தியாவுக்கு தூக்கிட்டு ஓடி வந்திடலாம்னு தோணுச்சு. என்னோட ஆசையை நிஜமாக்குற மாதிரி இந்தியன் டீம் கட்டாயம் கப்ப ஜெயிப்பாங்கனு நம்புறேன்!”

என்றவரிடம், “கிரிக்கெட் மீதான உங்களின் ஆர்வத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்” என்றேன்.

அதற்கு, “சின்ன வயசுல இருந்தே கிரிக்கெட் பிடிக்கும்னுலாம் சொல்லமாட்டேன். என்னோட ஃபீல்ட் வேற கிரிக்கெட் வேற. நடிப்புல பிஸியா இருந்ததால அதுல எல்லாம் அதிகமா கவனம் செலுத்த முடியல. ஆனா, அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்ல ‘ஸ்கோர் என்ன… ஸ்கோர் என்ன’னு கேக்குற சத்தங்களையும் எல்லாரும் ஆர்வமா கிரிக்கெட் பார்க்குறதையும் பார்த்திருக்கேன். கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்தான் கிரிக்கெட்லாம் கொஞ்சம் பார்க்க ஆரம்பிச்சேன். இப்பதான் கொஞ்சம் உட்காந்து நிதானமா கிரிக்கெட்லாம் பார்க்கிறேன்” என்றவர் தன்னுடைய ஃபேவரைட் கிரிக்கெட்டர் பற்றியும் பேசினார்.

தோனி

“தோனிதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சென்னைல ஐ.பி.எல் மேட்ச் எல்லாம் தெறியா இருந்துச்சு. நானும் மேட்ச்செல்லாம் பார்க்கப் போணும்னு டிக்கெட் ரெடி பண்ணி வச்சேன். ஆனா, அந்தச் சமயம் பார்த்து பொண்ணு நைனிகாவுக்கு எக்ஸாமா போச்சு அதனால போக முடியல. வேர்ல்ட் கப்பும் சென்னைல எல்லாம் நடக்குது.

Meena

2011-ல தோனி கேப்டனா இருந்து வேற லெவல்ல இந்தியாவுக்கு வேர்ல்ட் கப் வாங்கி கொடுத்தாரு. இந்தத் தடவை தோனி இல்ல. ஆனா, அவரால இன்ஸ்பயரான கோலி, ரோஹித்னு நிறைய பேர் இருக்காங்க. அவங்க வின் பண்ணி கொடுப்பாங்கன்னு நம்புறேன். ஆல் தி பெஸ்ட் இந்தியா!” என முடித்தார் மீனா.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.