மும்பை தேசியவாத காங்கிரஸில் இன்னும் அஜித்பவார் இருப்பதால் கட்சி உடையவில்லை என சரத்பவார் கூறி உள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா, பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தநிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த மாதம் 2-ந் தேதி தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சரத்பவாரின் அண்ணன் மகனுமான அஜித்பவார் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்தார். தொடர்ந்து அஜித்பவார் துணை முதல்வராகவும், சகன் புஜ்பால், ஹசன் முஷ்ரிப், தனஞ்செய் முண்டே, அதீதி தட்காரே உள்ளிட்ட மூத்த தலைவர்கள், […]
