சென்னை: இஸ்ரோ சாதனையைப் பாராட்டும் அதே வேளையில், இஸ்ரோவுக்கு இணையப் பாதுகாப்பை வழங்கி வருவதில் பெருமிதம் கொள்வதாக குயிக் ஹீல் டெக்னாலஜீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து குயிக் ஹீல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சஞ்சய் கட்கர் கூறுகையில், “இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் நாடு சாதித்துள்ளதைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.
எங்களின் ‘குயிக் ஹீல்’ மற்றும் ‘செக்யூரைட்’ ஆகியவை நீண்டகாலமாக இணையப் பாதுகாப்பு பங்காளிகளாக இருந்து வருகின்றன, நாடு முழுவதும் உள்ள இஸ்ரோவுக்கான ஏராளமான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சொத்துகளை விடாமுயற்சியுடன் பாதுகாத்து வருகிறோம். இது உண்மையில் எங்களுக்கு மிகப்பெரிய பெருமை தரக்கூடிய அம்சமாகும்.
இஸ்ரோ மற்றும் பல்வேறு முக்கியமான அரசு நிறுவனங்களின் இணையப் பாதுகாப்பு எல்லைகளைப் பாதுகாப்பதில் பெருமிதம் கொள்கிறோம், இதுபோன்ற வரலாற்றுப் பணிகளில் கவனம் செலுத்த அவர்களுக்கும் நமது தேசத்துக்கும் குயிக் ஹீல் உதவுகிறது” என்றார்.