பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ள `சந்திரமுகி – 2′ படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்தார். இதையடுத்து பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், “என்னோட பசங்கள எல்லா மேடைகளிலும் ஆட வைக்கணும் ஆசைப்படுவேன். ஒரே மாறி ஆயிடாத என்று சில பேர் சொல்லிருக்காங்க. த்ரிஷா, நயன்தாரா படங்கள் பண்ணா மட்டும் அடிக்கடி பார்க்கிறீங்கதானே! இவர்கள் ஆட்டத்தில் கிளாமர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வலி இருக்கும். அதுல கடவுள் இருப்பார். டிவி, விடியோல பார்க்கும் அனைவரும் இந்தப் பசங்களுக்கு வாய்ப்பு கொடுங்க. சுபாஸ்கரன் அண்ணா உங்க மனசு ரொம்ப பெருசு. நீங்க குடுக்குற பணத்தில் இடம் வாங்கி கொடுத்து என் பசங்களை டான்ஸ் ஆட வைப்பேன்.

அவங்க டான்ஸ் பிராக்டீஸ் பண்ணுவாங்க. உங்க தாயார் பேருல பில்டிங் ஓப்பன் பண்ணுறேன் சார். இந்த உலகத்தைக் கட்டிப்போடணும் என்றால் அது அன்பால மட்டும்தான் முடியும். அந்த அன்பு சுபாஸ்கரன் சார்கிட்ட இருக்கு. அவர் ஒரு குழந்தை மாதிரி!
கீரவாணி சார் ரெக்கார்டிங் அப்போ மசால் டீ, போண்டா சாப்பிடலாம் என்று சொல்லி விளையாட்டா இருப்பார். ஆனால் டக்குனு 10 நிமிஷத்தில் டியூன் போட்டுவிடுவார். வாசு சார் சொன்ன மாதிரி வடிவேலு சார் ஒரு டாக்டர்தான். அவருடன் வேலை பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி.

கங்கனா மேம் ரொம்ப போல்ட், டஃப்பான ஆளுன்னு சொன்னாங்க. ஷூட்டிங்க்கு வரும்போது கன் மேனோட (Gun Man) வருவாங்க. குட் மார்னிங் சொல்லக்கூடப் பயமா இருக்கும். அடுத்த நாள் ஷூட்டிங் ஹைதராபாத்லதான் நடந்துச்சு. ஆனால் ஏதோ பாகிஸ்தான் பார்டர்ல இருக்குற மாதிரி இருக்கு மேடம் என்றேன். உடனே சிரித்துவிட்டு கன் மேனை எல்லாம் வெளியே போகச் சொல்லிட்டார். அதுக்கு அப்பறம் பழகிப் பார்த்தப்பத்தான் தெரிஞ்சது, அவங்களும் ஒரு குழந்தை மாதிரிதான்னு. நாம நினைச்ச கங்கனா வேற, நேர்ல பார்க்கற கங்கனா வேற!” என்றார்.