அன்டனானரிவோ மடகாஸ்கரில் இந்திய பெருங்கடல் தீவு நாடுகள் பங்கேற்ற விளையாட்டு போட்டியின் துவக்க விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 12 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கரில், இந்திய பெருங்கடல் தீவு நாடுகளான மாலத்தீவு, மொரீஷியஸ் உள்ளிட்டவை பங்கேற்ற விளையாட்டு போட்டியின் துவக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
தலைநகர் அன்டனானரிவோவில், 41,000 பேர் அமரக்கூடிய மைதானத்தில் ஏராளமானோர் திரண்டதால், திடீரென கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்களில், 11 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த மைதானத்தில், 2019ல் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியின்போதும் கூட்டநெரிசலில் சிக்கி, 15 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement