பெங்களூரு:பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பயணியர் வசதிக்காக, முதல் முனையத்தில் இருந்து நேரடியாக வாகன நிறுத்துமிடத்துக்கு செல்லும் வகையில், நகரும் நடை மேம்பாலம் திறக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் அதிகளவில் பயணியர் வந்து செல்லும் இரண்டாவது இடமாக, பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது.
கடந்தாண்டு இரண்டாவது முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த முனையத்தில் ஆக., 31ம் தேதி முதலே, வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயணியருக்காக புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் நான்காவது வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து முதலாவது முனையத்துக்கு 420 மீட்டர் துாரத்துக்கு நடை மேம்பாலம் கட்டி உள்ளது.
நடை மேம்பாலத்தில் நகரும் படிக்கட்டுகளும், லிப்ட் வசதியும் உள்ளது. அத்துடன், வயதானவர்கள், நடக்க முடியாதவர்களுக்கு வசதியாக, நகரம் தரையும் அமைக்கப்பட்டுள்ளது.
இது நகரும் படிக்கட்டு போன்று, அதில் நின்று கொண்டால் போதும். தானாக முன்னோக்கி செல்லும். நடை மேம்பாலம் இருபுறமும் கண்ணாடி பேழையால் மூடப்பட்டுள்ளது. இரவிலும் இந்த பாதையில் தைரியமாக பயணிக்கலாம். மழையிலோ அல்லது வெளியிலிலோ எந்த பாதிப்பும் ஏற்படாது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement