What to watch on Theatre & OTT: அடியே டு கக்கன் – இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?

பாட்னர் (தமிழ்)

பாட்னர்

மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, யோகி பாபு, பாலக் லால்வானி, பாண்டியராஜன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பாட்னர்’. காமெடி, கலாட்டா திரைப்படமான இது ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகியுள்ளது.

கதாநாயகன் ஆதி, யோகி பாபு இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். இருவருக்கும் பணத்தேவை ஏற்படுகிறது. இதனால், ஆதி, யோகி பாபு இருவரும் சேர்ந்த பல வேலைகள் செய்கின்றனர். ஒருகட்டத்தில் லேப் ஒன்றில் திருடப் போன யோகி பாபுவிற்குத் தவறுதலாக ஒரு ஊசி குத்திவிடுகிறது. அதன் விளைவால் அவர் ஹன்சிகாவாக மாறிவிடுகிறார். அதற்குப் பின் என்ன நடந்தது என்பதுதான் இதன் கதைக்களம்.

அடியே (தமிழ்)

அடியே விமர்சனம்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், வெங்கட் பிரபு, கௌரி ஜி கிஷன், மதும்கேஷ், மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அடியே’. காதல், காமெடி, சையின்ஸ் பிக்‌ஷன் திரைப்படமான இது, ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகியுள்ளது.

வாழ்வில் தனக்கென யாருமில்லை என்று தற்கொலை செய்து கொள்ளப் போகும் ஜி.வி. பிரகாஷ், டிவி-யில் தன் சிறுவயது காதலியைப் பார்த்து மனம் மாறி அவரைத் தேடிச் செல்கிறார். அப்போது அவருக்கு ஏற்படும் ஒரு சின்ன விபத்தால் அவர் ஆசைப்பட்ட வாழ்க்கைக்கே செல்லும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதை அவர் தக்க வைத்துக்கொண்டாரா, அதில் என்னென்ன பிரச்னைகளை அவர் எதிர்கொண்டார் என்பதுதான் இதன் கதைக்களம்.

ஹர்காரா (தமிழ்)

ஹர்காரா

ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில் ராம் அருண் காஸ்ட்ரோ, காளி வெங்கட், பிச்சைக்காரன் மூர்த்தி, கௌதமி சௌத்ரி, ஜெய பிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹர்காரா’. தேனி கிராமத்தில் நடக்கும் காதல், காமெடி, ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்ட மலைக் கிராமம் புதிதாகத் தபால்காரராகப் பணியாற்ற வந்துள்ள காளி வெங்கட், அங்கிருக்கும் மக்களிடம் தபாலைக் கொண்டு சேர்க்கப் பாடாய்படுகிறார். காளி வெங்கட்டின் இந்தத் தபால்காரப் பயணத்தில் ஒரு தபாலை வெகுதொலைவில் மலை ஏறிக்கொண்டு செல்லும் சவாலைச் செய்ய முயல்கிறார். அப்பயணத்தில் அவருடன் வழிகாட்டியாக வரும் ஒருவர் வெள்ளைக்காரன் காலத்தில் பணியாற்றிய இந்தியாவின் முதல் தபால்காரான ‘ஹர்காரா’ என்பவரின் காதல் கலந்த வீர தீரக் கதையைச் சொல்வதுதான் இதன் கதைக்களம்.

3.6.9 (தமிழ்)

3.6.9

சிவ மாதவ் இயக்கத்தில் கே.பாக்யராஜ், ரா வில்லன் பிஜிஎஸ், பிளாக் பாண்டி, அங்கயர் கண்ணன், சக்தி மஹிந்திரா, கோவிந்த ராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘3.6.9’. சயின்ஸ் பிக்ஷன் திரில்லர் திரைப்படமான இது, ஆகஸ்ட் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பாதிரியாராக இருக்கும் பாக்யராஜின் சர்ச்சில் ஒரு கொள்ளை கும்பல் நுழைந்து விடுகிறது. அதை அவர் எப்படி சமாளித்தார். பாக்யராஜ் யார், இதன் பின்னணி என்ன என்பதே இதன் கதைக்களம்.

கக்கன் (தமிழ்)

கக்கன்

விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் காங்கிரஸ் தலைவரான கக்கன் அவர்களின் வாழ்க்கை வரலற்று திரைப்படம் இது. பிரபு மாணிக்கம் மற்றும் ரகோத் விஜய் இயக்கத்தில் ஜோசப் பேபி தயாரித்து நடித்துள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

King Of Kotha (மலையாளம்/தமிழ்/தெலுங்கு/இந்தி)

King of Kotha

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, டான்சிங் ரோஸ் ஷபீர், பிரசன்னா, நைலா உஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘King Of Kotha’. கேங்ஸ்டார் திரைப்படமான இது ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாகியுள்ளது.

பிரசன்னா, கொத்தா எனும் பகுதிக்குக் காவல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அங்கு கேங்ஸ்டராக இருக்கும் கண்ணன் பாய் என்பவரால் பிரசன்னா அவமானத்திற்குள்ளாகிறார். கண்ணன் பாயைத் தீர்த்துக்கட்ட கொத்தாவின் முன்னாள் கேங்ஸ்டராக இருந்த ராஜு பாயை மீண்டும் அழைத்து வருகிறார். ராஜு பாய் கொத்தாவிற்கு வந்து என்ன செய்தார், அவர் யார் என்பதுதான் இதன் கதைக்களம்.

Ramachandra Boss & Co (மலையாளம்)

Ramachandra Boss & Co

ஹனீப் அடேனி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் ‘Ramachandra Boss & Co’. நிவின் பாலி, வினய் ஃபோர்ட், ஜாபர் இடுக்கி, மமிதா பைஜு உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகியுள்ளது.

நிவின் பாலி மற்றும் அவரது நண்பர்கள் ஒரு பெரிய கோட்டை ஒன்றில் கொள்ளயடிக்கத் திட்டமிடுகின்றனர். அதில் நடக்கும் சொதப்பல்களை மீறி அவர்களின் திட்டம் சாத்தியமானதா என்ற காமெடி கலந்த ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் இது.

RDX (மலையாளம்)

RDX (Malayalam)

நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் ஷேன் நிகம், ஆண்டனி வர்கீஸ், நீரஜ் மாதவ், மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘RDX’. காதல், நட்பு, ரவுடிஸம் என ஜாலியான திரைப்படமான இது ஆகஸ்ட் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

காதல், நண்பர்கள் என ஜாலியாகச் சுற்றித் திரியும் கதாநயகன், ஒரு ரவுடி கும்பலின் பிரச்னைகளில் தலையிட்டு மாட்டிக் கொள்கிறார். அதன் பிறகு அவரது காதல் என்ன ஆனது, அவரைச் சூழ்ந்திருக்கும் பிரச்னைகளை அவரும் அவரது நண்பர்களும் சமாளித்தார்களா என்பதுதான் இதன் கதைக்களம்.

Toby (கன்னடம்)

Toby

பசில் அல்ச்சலக்கல் இயக்கத்தில் ராஜ் பி ஷெட்டி, சைத்ரா ஜே ஆச்சார், சம்யுக்தா ஹொரநாடு, கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

குடும்பத்துடன் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழும் ஒருவருக்கு ஊரில் இருக்கும் ரவுடி கும்பல்களால் பல பிரச்னைகள் வருகின்றன. அதை அவர் எப்படிச் சமாளித்தார், அது அவரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றியது என்பதே இதன் கதைக்களம்.

Bedurulanka 2012 (தெலுங்கு)

Bedurulanka 2012

கிளாக்ஸ் இயக்கத்தில் கார்த்திகேயா கும்மகொண்டா, நேஹா ஷெட்டி, அஜய் கோஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bedurulanka 2012’. ஆக்‌ஷன், திரில்லர் காமெடி திரைப்படமான இது ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகியுள்ளது.

பொறுப்பற்றுச் சுற்றும் கதாநாயகனிடம் ஊரையும், கோயில் நகைகளையும் காப்பாற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதை அவர் செய்தாரா என்பதுதான் இதன் கதைக்களம்.

Gandeevadhari Arjuna (தெலுங்கு)

Gandeevadhari Arjuna

பிரவீன் சத்தாரு இயக்கத்தில் வருண் தேஜ், சாக்ஷி வைத்யா, நாசர், விமலா ராமன், வினய் ராய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Gandeevadhari Arjuna’. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ஆகஸ்ட் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஒரு பெரும் தீவிரவாத கும்பலையும், அதன் தலைவனின் திட்டத்தையும் நாசர் மற்றும் அவரது தலைமையிலான காவல் அதிகாரிகள் எப்படி முறியடித்து அவர்களைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் இதன் கதைக்களம்.

Dream Girl 2 (இந்தி)

Dream Girl 2

ராஜ் சாண்டில்யா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, அனன்யா பாண்டே, அன்னு கபூர், பரேஷ் ராவல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Dream Girl 2’. காதல், காமெடி திரைப்படமான இது ஆகஸ்ட் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சீரியஸான வாழ்க்கையை வாழும் ஆயுஷ்மானின் வாழ்க்கையில் அனன்யா மீது காதல் வந்துவிடுகிறது. அந்தக் காதல் அவரை எப்படியெல்லாம் மாற்றுகிறது, அதனால் என்னென்ன பிரச்னைகள் வருகிறது என்பதுதான் இதன் கதைக்களம்

Retribution (ஆங்கிலம்)

Retribution

நிம்ரோட் ஆண்டல் இயக்கத்தில் லியாம் நீசன், நோமா டுமேஸ்வேனி, லில்லி அஸ்பெல், ஜாக் சாம்பியன், எம்பெத் டேவிட்ட்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Retribution’. திரில்லர் திரைப்படமான இது ஆகஸ்ட் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

யாரென்று தெரியாத மர்ம நபர் கதாநாயகன் லியாம் நீசன் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்களை மிரட்டி லியாம் நீசனை பல கொலைக் குற்றங்கள் செய்ய வைக்கிறார். அதைச் செய்யவில்லையென்றால் லியாம் நீசனின் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் ஆபத்து. இந்த மர்ம நபரிடமிருந்து தப்பி, அந்த மர்ம நபர் யார் என்பதையும், அவரின் பின்னணி என்ன என்பதையும் கதாநாயகன் லியாம் நீசன் கண்டுபிடித்தாரா என்பதுதான் இதன் கதைக்களம்.

Gran Turismo (ஆங்கிலம்)

GRAN TURISMO

நீல் ப்ளோம்காம்ப் இயக்கத்தில் டேவிட் ஹார்பர், ஆர்லாண்டோ ப்ளூம், ஆர்ச்சி மேடெக்வே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Gran Turismo’. அட்வன்சர் கார் ரேஸிங் திரில்லர் திரைப்படமான இது ஆகஸ்ட் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கார் ரேஸ் பிசினஸ் செய்யும் கம்பெனி, கம்ப்யூட்டரில் கார் ரேஸிங் கேம் விளையாடுபவர்களுக்குப் பயிற்சியளித்து உண்மையில் அவர்களைக் கார் ரேஸில் களமிறக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறது. இந்த முயற்சி சாத்தியமானதா, சிறு வயதிலிருந்து கார் ரேஸிங் கேம்கள் விளையாடும் கதாநாயகன் ஒரு சிறந்த கார் ரேஸர் ஆனாரா என்பதுதான் இதன் கதைக்களம்.

இந்த வார ஓடிடி ரிலிஸ்கள்

Black n White (தமிழ்) – Zee5

Black n White

தீக்‌ஷி இயக்கத்தில் கார்த்திக் ராஜ், ஆர்த்திகா, ஷ்ரவ்னிதா, மணிமொழியன் ராமதுரை மற்றும் ரிச்சர்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்த் திரைப்படம் ‘Black n White’. இத்திரைப்படம் ‘Zee5’ ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகியுள்ளது.

கோவிட் காலத்தில் அம்மாவிற்கு கோவிட் பாதிப்பு, அப்பாவிற்குப் பிடித்த வீடு கடனில் இருக்க பணம் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று பணம் தேடி அலையும் கதாநாயகன் ஒரு கட்டத்தில் கோயில் நகையைக் கொள்ளையடித்து மாட்டிக் கொள்கிறார். இறுதியாக இப்பிரச்னைகள் எல்லாம் சரியானதா, கதாநாயகன் மற்றும் அவனது குடும்பம் என்ன நிலைக்குச் சென்றது என்பதுதான் இதன் கதைக்களம்.

Killer Book Club (ஸ்பேனிஷ்) – Netflix

Killer Book Club

கார்லோஸ் அலோன்சோ ஓஜியா இயக்கத்தில் வெகி வெலிலா, இவான் பெல்லிசர், அல்வாரோ மெல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Killer Book Club’. ஹாரர் திரில்லர் ஸ்பேனிஷ் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகியுள்ளது.

மாஸ்க் அணிந்த அமானுஷ்ய சக்தியிடம் மாட்டிக் கொள்ளும் நண்பர்கள், அந்த அமானுஷ்ய சக்தியிடமிருந்து தப்பினார்களா என்பதுதான் இதன் கதைக்களம்.

You Are So Not Invited to My Bat Mitzvah (ஆங்கிலம்) – Netflix

You Are So Not Invited to My Bat Mitzvah

சம்மி கோஹன் இயக்கத்தில் இடினா மென்செல், ஜாக்கி சாண்ட்லர், ஆடம் சாண்ட்லர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘You Are So Not Invited to My Bat Mitzvah’. காதல், நட்பு, காமெடிகள் நிறைந்த இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகியுள்ளது.

தன்னை விட்டு காதலனுடன் அதிகமாகப் பழகும் தோழியை மீண்டும் பழையபடி நட்பாக்கிப் பழக நினைக்கிறார் கதாநாயகி. இரண்டு தோழிகளுக்கிடையே நடக்கும் பாசப்போராட்டம்தான் இதன் கதைக்களம்.

இந்த வார வெப்சீரிஸ்கள்

Aakhri Sach (இந்தி) – Disney+ Hotstar

Aakhri Sach

ராபி கிரேவால் இயக்கத்தில் தமன்னா, சஞ்சீவ் சோப்ரா, கெஹ்னா சேத், ராகுல் பக்கா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Aakhri Sach’. இந்த வெப்சீரிஸ் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 25ம் முதல் தேதி வெளியாகிறது.

காவல் அதிகாரியாக இருக்கும் தமன்னா, 10 கொலைகள் செய்த ஒரு கொலையாளியையும், அதன் பின்னணியையும் கண்டுபிடித்தாரா என்பதுதான் இதன் கதைக்களம்.

Who is Erin Carter? (ஆங்கிலம்) – Netflix

Who is Erin Carter?

ஆஷ்லே வே, சவினா டெல்லிகோர், பில் ஈகிள்ஸ் ஆகியோர் இயக்கத்தில் எவின் அகமது, சீன் டீல், இண்டிகா வாட்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Who is Erin Carter?’. ஆக்‌ஷன், க்ரைம் திரில்லர் நிறைந்த இந்த வெப்சீரிஸ் ‘Netflix’ ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 25ம் முதல் தேதி வெளியாகிறது.

அம்மா, மனைவி, டீச்சர் ஸ்பெயினில் புலம்பெயர்ந்து வாழும் கதாநாயகியின் அமைதியான வாழ்வை ஆக்‌ஷன் வாழ்வாக மாற்றுகிறது ஒரு கொள்ளைச் சம்பவம். இது அவரின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்திறது. அம்மா, மனைவி, டீச்சர், ஆக்‌ஷன் பெண்ணாக இருக்கும் இந்தக் கதாநாயகி யார், அவரின் வாழ்க்கை என்ன என்பதைப் பற்றியதுதான் இதன் கதைக்களம்.

Ahsoka (ஆங்கிலம்) – Disney+ Hotstar

Ahsoka

டேவ் ஃபிலோனி, ஸ்டெஃப் கிரீன், ரிக் ஃபமுயிவா, ஜெனிபர் கெட்ஸிங்கர் உள்ளிட்டோர் படைப்பாக்கத்தில் ரொசாரியோ டாசன், நடாஷா லியு போர்டிசோ, வெஸ் சதம் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Ahsoka’. ஆக்‌ஷன் நிறைந்த இந்த ஸ்டார்வார்ஸ் யுனிவர்ஸ் வெப்சீரிஸ் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 25ம் முதல் தேதி வெளியாகிறது.

கேலக்டிக் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, முன்னாள் ஜெடாய் நைட் அஹ்சோகா டானோ, ஆபத்திலிருக்கும் கேலக்டிக் பேரரசின் விண்மீன் மண்டலத்தைக் காப்பதுதான் இதன் கதைக்களம்.

தியெட்டர் டு ஓடிடி

தலைநகரம் – 2 (தமிழ்) – Amazon Prime Video

தலைநகரம் 2

இயக்குநர் சுந்தர்.சி கதாநயகனாக அறிமுகமாக, வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரத்தின் கலகலப்பான காமெடியுடன் 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தலைநகரம்’. இப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள திரைப்படம் ‘தலைநகரம் 2’. சுந்தர்.சி, தம்பி ராமையா, யோகி பாபு, பாலக் லால்வானி, ‘பாகுபலி’ பிரபாகர், ஆயிரா, ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை மூன்று ரவுடிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒரு காலத்தில் சென்னை தலைநகரிலேயே மிகப்பெரிய ரவுடியாக இருந்த சுந்தர்.சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த ரவுடிகளின் பாதைகளில் குறுக்கிடும் சுந்தர்.சி, அவர்களைச் சமாளித்தாரா, மீண்டும் சென்னை தலைநகரின் ரவுடியாக உருவெடுத்தாரா என்பதுதான் இதன் கதைக்களம்.

Aachar & Co (கன்னடம்) – Amazon Prime Video

Aachar & Co

சிந்து ஸ்ரீனிவாச மூர்த்தி இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘Aachar & Co’. அனிருத் ஆச்சார்யா, ஹர்ஷில் கௌஷிக், நிஷா ஹெக்டே, சோனு வேணுகோபால் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். 1960 காலகட்டத்தில் பரம்பரியத்துடன் வாழும் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படம் இது. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Marlowe (ஆங்கிலம்) – Amazon Prime Video

MARLOWE

நீல் ஜோர்டான் இயக்கத்தில் லியாம் நீசன், டயான் க்ரூகர், ஜெசிகா லாங்கே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘MARLOWE’. ஆங்கில மொழித் திரைப்படமான இது திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. தற்போது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

1930 காலத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த க்ரைம்களின் பின்னணியை விசாரிக்கிறார் டெடக்டிவ் ஏஜெண்டான லியாம் நீசன். இதுதான் இதன் கதைக்களம்.

Bro (தெலுங்கு) – Netflix

Bro

பிரபல தமிழ் இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் பவன் கல்யாண், ரோகினி, பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுல்ள திரைப்படம் ‘Bro’. காமெடி, திரில்லர் திரைப்படமான இது திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இது தமிழில் வெளியான ‘விநோதய சித்தம்’ படத்தின் ரீமேக்.

Baby (தெலுங்கு) – Aha

Baby

சாய் ராஜேஷ் நீலம் இயக்கத்தில் ஆனந்த் தேவரகொண்டா, மௌனிகா ரெட்டி, சீதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘Baby’. காதல், ரொமாண்டிக் திரைப்படமான இது திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. தற்போது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Kurukkan (மலையாளம்) – manoramaMAX

Kurukkan

ஜெயலால் திவாகரன் இயக்கத்தில் அன்சிபா, ஷைன் டாம் சாக்கோ, பிந்து ஜெயன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Kurukkan’. காமெடி கலந்த க்ரைம் திரில்லர் திரைப்படமான இது திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. தற்போது ‘manoramaMAX’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

காவல் அதிகாரியாக இருக்கும் கதாநாயகன் கொள்ளை கும்பலைப் பிடித்து கோர்ட்டில் இருக்கும் வழக்கை வெல்லப் போராடுகிறார். எதார்த்தமாகச் சின்னச் சின்ன தவறுகள் செய்து காமெடி கலந்த தனது இயல்பான சுபாவத்தில் வழக்கை விசாரிக்கிறார் கதாநாயகன். இந்த வழக்கில் என்ன நடந்தது, கதாநாயகன் கொள்ளைக் கும்பலைப் பிடித்தாரா என்பதுதான் இதன் கதைக்களம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.