ஓடோடி உதவிய பிடிஆர் : அந்த மனசுதான் சார் கடவுள்.. துயரத்திலும் உருகிய உ.பி மக்கள்!

மதுரை ரயில் தீ விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடிச் சென்று உதவி செய்துள்ளார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். அவர்கள் விமானத்தில் ஏறும் வரை உறுதுணையாகவும் இருந்துள்ளார்.

முக்கிய துறைக்கு அமைச்சர்திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வருக்கு அடுத்து முக்கிய துறையாக கவனிக்கப்படும் நிதித் துறையை மூத்த தலைவர்களில் ஒருவருக்கு மு.க.ஸ்டாலின் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நிதியமைச்சராக்கி அதிரடி காட்டினார் முதல்வர். முதல்வரின் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை பழனிவேல் தியாகராஜன். நிதித் துறையில் சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு, அதனை சீரான பாதைக்கு கொண்டு வர முயற்சிகள் எடுத்தார். அதற்கு கைமேல் பலன் வந்தது.பதவியை மாற்றினாலும் தொடரும் பணிகள்அனைத்து கோப்புகளும் சரியாக இருந்தால்தான் நிதி ஒதுக்க கையெழுத்தும் இட்டார். இதனால் சீனியர் அமைச்சர்கள் உள்பட பலரும் அவர் மீது கடுப்பில் இருந்தனர். இதனிடையே ஆடியோ விவகாரம் பூதாகரமாக நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு தகவல் தொழில்நுட்ப அமைச்சரானார் பிடிஆர். ஆனாலும் பதவி இறக்கப்பட்டுவிட்டோம் என்ற கவலை சிறிதுமின்றி சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

​மக்கள் மீது வெளிப்படும் அக்கறை​

இது ஒரு பக்கம் இருந்தாலும் தனது சொந்த ஊரான மதுரை மக்களுடனான தொடர்பையும் கைவிட்டுவிடவில்லை. அதற்கு சான்றாக பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. சமீபத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்ததோடு மட்டுமல்லாமல், அனைத்து மாணவர்களுக்கு சிற்றுண்டி கிடைக்க வேண்டும் என்று அதற்கான முன்னெடுப்பையும் எடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிஇந்த நிலையில் லக்னோவில் இருந்து தென் இந்தியாவிற்கு ஆன்மீக சுற்றுலா வந்த ரயில் மதுரையில் தீ விபத்துக்கு உள்ளானதில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சொந்தங்களை இழந்த மக்கள் ஊர் திரும்புவதற்கு வழியின்றி பரிதவித்து நின்றபோது அங்கு ஓடோடி சென்றார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.சொந்த மொழியிலேயே பேசி ஆறுதல்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களை சந்தித்த அவர், இந்தி மொழியிலேயே பேசி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். உறவுகளை இழந்து கலங்கி நின்ற மக்கள், பிடிஆர் கைகளைப் பிடித்து கதறி அழுதனர். எப்படியாவது சொந்த ஊர் சென்று சேர்த்துவிடுங்கள் என்று கண்ணீர் மல்க கோரினர்
அவர்களின் தோள்களை தட்டிக்கொடுத்து ஆறுதல் தெரிவித்தவர், செலவுக்கு சிறிது பணத்தை தந்தார்.
விமான டிக்கெட் தந்து உதவிபின்னர் தீ விபத்தில் உயிரிழந்த உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், உடல்களை ஆம்புலஸின் ஏற்றுவதைப் பார்த்து கலங்கி நின்றார். அதனைத் தொடர்ந்து விமான நிலையம் சென்று அங்கு உத்தர பிரதேசம் செல்ல காத்திருந்தவர்களுக்கு விமான டிக்கெட் எடுத்து தந்தார். அத்துடன் மருந்து, மாத்திரைகளையும் தந்து வழியனுப்பினார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட மக்கள் நீண்ட நேரம் கையைக் குலுக்கி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அப்போது, தனது காலில் விழுந்த சிறுவனை தூக்கி கொஞ்சினார். அவர்களின் துயருறு சூழலைக் கண்டு பிடிஆரும் கண்ணீர் சிந்தினார். அனைவரையும் விமானத்திற்கு அனுப்பிவிட்ட பிறகே மற்ற பணிகளை கவனிக்கச் சென்றார் பிடிஆர்.அயோத்தி பட பாணியில் நிஜ சம்பவம்​​
அயோத்தி படத்தில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் இறந்துவிடுவார். அவரது உடலை விமான நிலையத்தில் சொந்த ஊர் கொண்டு செல்லவும், அவர்கள் குடும்பத்தினரை விமானத்தில் அழைத்து செல்லவும் சசிக்குமார் கடைசிவரை இருந்து துணைபுரிவார். அதுபோலவே அமைச்சர் பிடிஆரும் லக்னோ மக்களுக்கு விமானம் ஏறும்வரை உதவி செய்தது அயோத்தி சம்பவத்தை நிஜத்தில் பார்த்தது போல இருந்ததாக கூறுகிறார்கள் சமூகவலைதள வாசிகள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.