வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: குஜராத்தியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிற்கு ஆமதாபாத் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
பீஹார் துணை முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் கடந்த மார்ச் 21-ம் தேதி பாட்னாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குஜராத்தியர்கள் மோசடி பேர்வழிகள் என குறிப்பிட்டார்.
![]() |
இது தொடர்பாக ஹரீஷ் மேத்தா என்பவர் ஆமதாபாத் மெட்ரோ பொலிட்டன் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.அதில் குஜராத்தியர்களை அவமானப்படுத்தும் விதமாக பேட்டியளித்த தேஜஸ்வி யாதவ் மீது இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500 கீழ் குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.நீதிபதி டி,ஜே. பார்மர் , தேஜஸ்வி யாதவுக்கு சம்மன் அனுப்பி செப்டம்பர் 22ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement