சீமானை கைது செய்தே ஆக வேண்டும்: நேராக களத்தில் இறங்கிய விஜயலட்சுமி

தன்னுடன் சேர்ந்து வாழ்ந்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து வீடியோ மூலம் புகார் கூறி வந்த நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து புகார் அளித்துள்ளார்.

சீமானை கைது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எனக்கு இழப்பதற்கு எதுவுமே இல்லை. நிறைய நேரங்களில் இறந்துவிடலாம் என்றுகூட முடிவெடுத்திருக்கிறேன். ஆனால் எனது இறப்பிற்கும் தவறான காரணம் கற்பித்துவிடக்கூடாது.

கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரான மறைந்த தடா சந்திரசேகர் மூலம் சீமான் ஒரு பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தையின்போது, என்னை ஊர் அறிய திருமணம் செய்துகொண்டு மனைவியாகவும், கயல்விழியை துணைவியாகவும் கொண்டு வாழ்கிறேன் என்று கூறியிருந்தார்.

அதை நம்பி, நான் தொடர்ந்த வழக்கில் மேல் நடவடிக்கை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்திருந்தேன். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதி கொடுக்கவில்லை.

ரஜினியை சுதந்திரமாக வாழ விடுங்க – சீமான்

காசுக்காக வந்து நிற்கிற பொண்ணுன்னு கேவலமா எழுதியிராதீங்க, பாதிக்கப்பட்ட பெண் என்ற வகையில் என் குரலை பதிவு செய்யுங்கள். உங்கள் வீட்டில் உள்ள பெண் போல் நினைத்து இந்த பிரச்சினையை பாருங்கள். சீமானை கைது செய்யாமல் விடமாட்டேன்.

அதிமுக அரசு பெரிய அளவில் விசாரணை நடத்தவில்லை. என்னிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினார்களே தவிர, சீமானிடம் எதுவும் விசாரணை நடத்தவில்லை. ஆனால் திமுக அரசும், காவல் துறையும் அவரை சும்மா விடாது என நினைக்கிறேன்.

மறுபடியும் மறுபடியும் என்னையே கேள்வி கொண்டிருக்காதீர்கள். குற்றம் செய்தவர்களை கேள்வி கேளுங்கள்” என்று கூறினார்.

அப்போது திடீரென பத்திரிக்கையாளர்கள் சிலருக்கும் அவருக்கும் வாக்குவாதம் எழ பாதியிலேயே செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு கிளம்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.