சென்னை சென்னை புழல் சிறையில் துணை ஜெயிலரை ஒரு நைஜீரிய கைதி தாக்கி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இசுபா அகஸ்டின் என்ற நபர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அகஸ்டினிடம் இருந்து 2 செல்போன்கள், சிம் கார்டுகள், இயர் பட்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இசுபா அகஸ்டின் புழல் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். துணை ஜெயிலர் சாந்தகுமார் சிறைக்குள் ரோந்து சென்ற […]
