
புரமோஷனுக்காக தயாராகும் லியோ படத்தின் பெயர் பொறிக்கப்பட்ட காசுகள்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் விஜய்யும், திரிஷாவும் இணைந்து நடித்துள்ளார்கள். தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மலேசியாவில் லியோ படத்தின் பெயர் பொறிக்கப்பட்ட காசுகள் அச்சடிக்கப்பட்டு வருகிறது. இந்த காசுகளை அடுத்தடுத்து பல ஊர்களிலும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது ரசிகர்கள் மத்தியில் புழக்கத்தில் விட்டு, படத்திற்கான புரமோஷனில் பரபரப்பு கூட்ட திட்டமிட்டுள்ளார்கள்.