நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் 600 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வியாழக்கிழமை வெளியான இத்திரைப்படம் 11,12, 13, 14 மற்றும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என சரியான விடுமுறை வீக்கெண்டில் திரைக்கு வந்தது இப்படத்திற்கு இன்னும் கூடுதல் சிறப்பாக அமைந்தது. இதனால் அந்த வீக்கெண்டில் ஒற்றை டைகராகக் களமிறங்கி பாக்ஸ் ஆப்ஸில் கலக்கியது ‘ஜெயிலர்’ திரைப்படம். மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ் என இருபெரும் நடிகரின் ஒரிரு காட்சிகளே திரையைத் தெறிக்க விட பல மொழிகளில் பெரும் வரவேற்பையும், வசூலையும் அள்ளிக்குவித்தது இப்படம்.

இதைக் கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் கலாநிதிமாறன், ரஜினிக்கு BMW X7, நெல்சனுக்கும் அனிரூத்திற்கும் Porsche என விலையுயர்ந்த கார்களைப் பரிசாக வழங்கினார். இது சமுக வலைதளங்களிலும், சினிமா வட்டாரங்களிலும் பெரும் பேசுபொருளாகியிருந்தது.
இந்நிலையில் இன்று ‘ஜெயிலர்’ பட வெற்றி விழா நசைபெற்றது. இவ்விழாவில் ரஜினி, நெல்சன், மோகன் லால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இவ்விழாவின் சிறப்பாக இப்படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு தங்க நாணயத்தைப் பரிசாக அளித்துள்ளார் கலாநிதிமாறன்.
#jailerhistoricsuccess ❤️#Jailer #thankyou #SuperStarRajinikanth @rajinikanth sir @anirudhofficial @sunpictures https://t.co/QYVhAm88p7 pic.twitter.com/TcJdAxV9Md
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) September 10, 2023
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் நெல்சன், “ஜெயிலரை மகத்தான வெற்றியடையச் செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று படக்குழு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.