சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமின் மனு மீது, அமலாக்கத்துறை 4 நாட்களில் பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மறைந்த ஜெயலலிதா, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்போது திமுகவில் இணைந்து, அமைச்சராக இருந்து வருகிறார். இவர் அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது லஞ்சம் பெற்றதாக, திமுக அரசு அவர்மீது வழக்கு […]
