வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காவிரியில், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகாவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
டெல்டா சாகுபடிக்கு, காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என தமிழகம் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால், அணைகளில் போதிய தண்ணீர் இல்லை எனக்கூறி கர்நாடகா மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில், நீர்வளத்துறை அதிகாரி சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில், அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement