த்ரிஷா நடிக்கும் வெப் தொடர்
நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இது அல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடிக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகு த்ரிஷா-வின் மார்கெட் இன்னும் உயர்ந்துள்ளது. லியோ படத்தில் தற்போது விஜய்-க்கு ஜோடியாக நடித்துள்ளார். இதுதவிர ஒரு சில படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் இப்போது நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் த்ரிஷா வெப் தொடரில் நடித்து வருகிறார். போலீஸ் கதை களத்தில் உருவாகும் இந்த தொடரில் இந்திரஜித் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். விரைவில் இந்த வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்பதை டிரைலர் உடன் படக்குழுவினர்கள் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.