வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: கடந்த 5 ஆண்டுகளில் பிரிட்டனில் பணியாற்றும் பெண் டாக்டர்களில் 3 ல் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி உள்ளதும், சிலர் பலாத்காரம் செய்யப்பட்டதும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனில் தேசிய சுகாதார இயக்கத்தில் பணியாற்றும் டாக்டர்கள், பணியிடத்தில் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 1,434 பேர் கலந்து கொண்டனர். இதன் முடிவுகள், ‛ பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் சர்ஜரி ‘ இதழில் வெளியிடப்பட்டது.
அதில், 30 சதவீத பெண் டாக்டர்கள், பாலியல் ரீதியாக தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளனர்.
29 சதவீதத்தினர், வேலை செய்யுமிடத்தில் பாலியல் ரீதியாக சீண்டலுக்கு உட்பட்டதாகவும் , 40 சதவீதம் பேர் உடல்ரீதியான விமர்சனத்திற்கு உள்ளானதாகவும், 38 சதவீதம் பேர் கேலி கிண்டலுக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement