சண்டிகர்: ஹரியானாவில் நூ மாவட்டத்தில் நடந்த பேரணியின் போது வன்முறை வெடித்தது. இதற்கு, மோனு மனேசர் என்பவர் மீது போலீசார் குற்றம்சாட்டினர். மேலும், ராஜஸ்தானில் நசீர் மற்றும் ஜூனையத் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. தலைமறைவாக இருந்த அவரை, இரு மாநில போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஹரியானா போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவரை தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஜாமினில் வெளிவரக்கூடிய பிரிவில் ஹரியானா போலீசார் கைது செய்தனர். மாலையில் அவருக்கு ஜாமின் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அவரை, மாலையில் ராஜஸ்தான் போலீசிடம் ஒப்படைக்க ஹரியானா போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement