நார்வே இளவரசி மறுமணம் செய்ய முடிவு| The Norwegian princess decided to remarry

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஓஸ்லோ: ஐரோப்பிய நாடான நார்வேயை சேர்ந்தவர் இளவரசி மார்த்தா லுாயிஸ், இவரது முன்னாள் கணவர் ஆரி பென், இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். எனினும் இருவரும் 2016ல் விவாகரத்து பெற்றனர்.

இந்த சூழ்நிலையில் ஆரி பென் கடந்த 2019-ல் காலமானார்.கணவரை இழந்த இளவரசி மார்த்தா லூயிஸ், பிரபல ஆப்பிரிக்க அமெரிக்க ஹாலிவுட் ஆன்மீக ஆசிரியர் டியூரெக் வெர்ரெட் என்பவரை காதலித்து வருகிறார்.இருவரும் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024 ஆகஸ்ட் 31 ம் தேதி முறைப்படி திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர். முன்னதாக அரச கடமைகளில் இருந்து விலகுவதாக நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ் அறிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.