லக்னோ, உத்தர பிரதேசத்தில் வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வான அசம் கான் மற்றும் அவருக்கு சொந்தமானவர்களின் 30க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
உத்தர பிரதேசத்தில் ராம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் அசம் கான். சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த இவர் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்தது.
இதையடுத்து, உத்தர பிரதேசத்தில் உள்ள அசம் கான் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில், வருமான வரித் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
ராம்பூர், சஹரன்பூர், லக்னோ, காஜியாபாத், மீரட் உட்பட உத்தர பிரதேசத்தின் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
மத்திய பிரதேசத்திலும், அசம் கானுக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் நடத்தி வரும் அறக்கட்டளை உட்பட, 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகச் சென்று சோதனை நடத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement