புதுடில்லி :’மகாதேவ் ஆன்லைன்’ சூதாட்ட வழக்கு தொடர்பாக, 417 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக, அமலாக்கத்
துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரை தலைமையிடமாக வைத்து, மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி செயல்பட்டு வருகிறது.
இந்த செயலியின் நிர்வாகிகளாக, சத்தீஸ்கரின் பிலாய் என்ற பகுதியைச் சேர்ந்த சவுரப் சந்திரகர், ரவி உப்பல் ஆகியோர் உள்ளனர்.
இந்த செயலி வாயிலாக, பினாமி வங்கிக் கணக்குகளில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, மகாதேவ் ஆன்லைன் செயலி உடன் தொடர்புடைய கோல்கட்டா, மும்பை, போபால் உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இந்த சோதனைகளில், 417 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், பல முக்கிய குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement