சென்னை: மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். தமிழ் திரையுலகின் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் வெற்றிநாயகனாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறார். விஷால் நடிப்பில் அண்மையில் வெளியான எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தன.
